இந்த மும்பை வீரருக்கு இவ்வளவு திமிர் இருக்ககூடாது ! கொந்தளித்த ரசிகர்கள் ! 1

இந்த மும்பை வீரருக்கு இவ்வளவு திமிர் இருக்ககூடாது ! கொந்தளித்த ரசிகர்கள் !

14வது ஐபிஎல் சீசன் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் அணியும் தலா 10 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறது.

ஏப்.29 டெல்லி அருன் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்  அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.

இந்த மும்பை வீரருக்கு இவ்வளவு திமிர் இருக்ககூடாது ! கொந்தளித்த ரசிகர்கள் ! 2

முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் பட்லர் 41 ரன்களும், ஜெஸ்வால் 32 ரன்களும், சஞ்சு சாம்சன் 42 ரன்களும், சிவம் டூபே 35 ரன்களும் குவித்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 171  ரன்கள் குவித்தனர்.

மும்பை பவுலர் ராகுல் சஹார் 2 விக்கெட்கள் மற்றும் போல்ட், பும்ரா தலா 1 விக்கெட் எடுத்து இருக்கிறார்கள். 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய முய்பை இந்தியன்ஸ் அணியில் டீகாக் 70 ரன்களும் குர்னால் பாண்டியா 39 ரன்களும் குவித்ததன் மூலம் 18.3 ஓவரில் 172 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் சார்பாக கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்கள் மற்றும் முஸ்தாபிசுர ரஹ்மான் 1 விக்கெட் எடுத்திருக்கிறார். 

இந்த மும்பை வீரருக்கு இவ்வளவு திமிர் இருக்ககூடாது ! கொந்தளித்த ரசிகர்கள் ! 3

இந்நிலையில், இந்த போட்டியில் மும்பை வீரர் குர்னால் பாண்டியா இரண்டாவது ரன்னிற்காக டைவ் அடித்து போது அவரது உள்ளங்கை அடித்தபட்டு விட்டது. இதனால் இவர் மாய்ஸ்டரைசரை கேட்டார். அதை கொண்டு சக வீரரை குர்னால் பாண்டியா கையாண்ட விதத்தை கண்டு அனைவரும் அதிரச்சி அடைந்தனர். அந்த மாய்ஸ்டரைசரை பயன்படுத்தி விட்டு குர்னால் அவரது முகத்தை பார்க்காமல் தூக்கி எரிந்துவிட்டு பேட்டிங் சென்றார்.

குர்னால் பாண்டியாவின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பலரும் குர்னால் பாண்டியாவை விமர்சனம் செய்யத் தொடங்கினர். சில நாட்களவே சர்ச்சையில் சிக்கி வரும் குர்னால் மீண்டும் மீண்டும் தவறான செயல்களை செய்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டே வருகிறார்.

இந்த மும்பை வீரருக்கு இவ்வளவு திமிர் இருக்ககூடாது ! கொந்தளித்த ரசிகர்கள் ! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *