"இதுல சிறப்பா விளையாடும் வீரர் தான் உண்மையான பேட்ஸ்மன்" - கவாஸ்கர் 1

இந்தியா மற்றும் இங்கிலாந்து  இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக  நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் வெறும் 112 ரன்கள் மட்டுமே குவித்தனர்.

இங்கிலாந்து வீரர்கள் இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து வந்தனர். இதில் கிராலி அடித்த 53 ரன்கள் தான் அதிகபட்சமாக இருக்கிறது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 99 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுகளை இழந்தது. இன்றை இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 46 ரன்கள் குவிப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது.

இறுதி டெஸ்டில் இவர்கள் அதிரடி காட்டுவார்கள் ! உறுதியாக கூறும் விவிஎஸ் லட்சுமணன் ! 2

இதனால் இந்திய அணி மொத்தமாக 145 ரன்கள் குவித்து 33 ரன்கள் மட்டுமே முன்னிலை வகித்தது. இதன் பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி  30 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதனால் இந்திய அணிக்கு 47 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகச்சிறிய இலக்கு கிடைத்திருக்கிறது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 7.4  ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. இதில் ரோகித் சர்மா 25 ரன்களும் சுப்மன் கில் 15 ரன்களும் குவித்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி 2 – 1 என்று முன்னிலை வைத்திருக்கிறது.

"இதுல சிறப்பா விளையாடும் வீரர் தான் உண்மையான பேட்ஸ்மன்" - கவாஸ்கர் 2

இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டே நாளில் முடிவடைந்துள்ளதாலும் பேட்ஸ்மன்கள் பேட்டிங்கில் திணறியதாலும் பல்வேறு விமர்சனங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து முன்னாள் வீரர்கள், வல்லுநர்கள் என அனைவரும் கருத்து தெறிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் “மூன்றாவது டெஸ்ட் நடைபெற்ற நரேந்திர மோடி ஆடுகளத்தில் யார் சிறப்பா பேட்டிங் செய்கிறாரோ அவர் தான் உண்மையான பேட்ஸ்மன்” என்று கூறியிருக்கிறார்.

இந்த போட்டியில் ஹிட் மேன் ரோகித் சர்மா முதல் இன்னிஸ்சில் 66 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிஸ்சில் 25 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் ரோகித் சர்மா தான் உண்மையான பேட்ஸ்மன் என்று கூறுகிறார்கள். இதுபோன்று சுனில் கவாஸ்கரின் கருத்திற்கு ரசிகர்கள் அனைவரும் ரோகித் தான் கெத்து என்று பதிலளித்து வருகின்றனர். 

"இதுல சிறப்பா விளையாடும் வீரர் தான் உண்மையான பேட்ஸ்மன்" - கவாஸ்கர் 3

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *