அம்பயரின் தவறான முடிவால் விக்கெட்டை இழந்த தோனி; கழுவி ஊற்றும் ரசிகர்கள்

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் தவறான முடிவு மூலம் தோனிக்கு அவுட் கொடுத்த அம்பயரையும், ரிவியூவை வீணடித்த இந்திய வீரர்களையும் நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மழை காரணமாக, 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. அடுத்த நடந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. 71 ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அதிகபட்சமாக   ஹேண்ட்ஸ்கோம்ப் 73 ரன்களும், உஸ்மான் கவாஜா 59 ரன்களும், ஷேன் மார்ஸ் 54 ரன்களும், மார்கஸ்ஸ்டோனிஸ் 47* ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 5விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 288 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி தரப்பில், புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் ஜடேஜா ஒருவிக்கெட்டும் எடுத்தனர்.

இதனையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய இந்தியஅணி, வெறும் 7 ரன்கள் எடுத்தப்பதற்கு முன்பாகவே முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்துதடுமாறியது.

பின்னர் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா – தோனி கூட்டணி போட்டியின்தன்மையை உணர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

வெற்றியை இந்திய அணி நெருங்கி கொண்டிருக்கையில், தோனி 51 ரன்கள் எடுத்த போது எல்.பி.டபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். தோனிக்கு அம்பயர் அவுட் வழங்கியது தவறான தீர்ப்பு என சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அவுட் கொடுத்த அம்பயரை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

அதில் சில;

 

 

 

 

இந்திய அணி முன்னதாக டி.ஆர்.எஸ் முறை பயன்படுத்திவிட்டதால், அவுட் இல்லை என்பது தெளிவாக தெரிந்தும் தோனியால் ரிவியூ கேட்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. • SHARE

  விவரம் காண

  யுவராஜ் சிங் அதிரடி வீண்…! மும்பை அணி தோல்வி! ட்விட்டர் ரியாக்சன்!!

  12-ஆவது ஐபிஎல் சீசனின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில்...

  வீடியோ; ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மாஸ் காட்டிய ரிஷப் பண்ட் !!

  வீடியோ; ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மாஸ் காட்டிய ரிஷப் பண்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் ருத்ரதாண்டம் ஆடியுள்ளார். ஐ.பி.எல்...

  பும்ராஹ்விற்கு ஓய்வு கொடுத்துவிடுங்கள்; ட்விட்டரில் ரசிகர்கள் வேண்டுகோள் !!

  பும்ராஹ்விற்கு ஓய்வு கொடுத்துவிடுங்கள்; ட்விட்டரில் ரசிகர்கள் வேண்டுகோள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டு பும்ராஹ்விற்கு ஐ.பி.எல் தொடர் முழுவதிலும் இருந்து ஓய்வு வழங்க...

  ரிஷப் பன்ட் பேயடி!! டெல்லி அணி 213 ரன் குவிப்பு!! ட்விட்டர் ரியாக்சன்!!

  மும்பை மற்றும் டெல்லி அணிகள் இடையேயான முதல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் ஆடும் லெவன் ரோஹித்...

  ராஜஸ்தான் vs பஞ்சாப்: ராஜஸ்தான் மண்ணில் வெல்லுமா பஞ்சாப்?

  கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்.ஆர்) இரு அணிலும் 4வது ஆட்டத்தில் மோதுகின்றன. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில்...