India's Rishabh Pant during the nets session at The Kia Oval, London. (Photo by Adam Davy/PA Images via Getty Images)

ரிஷாப் பன்ட்-டின் விக்கெட் கீப்பிங்கில் டெக்னிக்கல் பிரச்னை இருப்பதாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பரூக் என்ஜினீயர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பரூக் என்ஜினீயர். விக்கெட் கீப்பரான இவர், 46 டெஸ்ட் போட்டிகளிலும் 5 ஒரு நாள் போட்டி களிலும் விளையாடியிருக்கிறார்.

ரிஷாப் பன்ட்-டின் விக்கெட் கீப்பிங் பற்றி அவர் கூறும்போது, ’’ரிஷாப், எனது இளமை காலத்தை ஞாபகப்படுத்துகிறார். அவரது அணுகுமுறை, தோனியை போன்றே இருக்கிறது. ஆனால் இப்போதே, அவரை புகழின் உச்சத்தில் தூக்கி வைக்கவேண்டாம். ஆனால், அவரை ஊக்கப்படுத் துங்கள். ஆனால், டெக்னிக்கலாக அவர் சரியான விளையாடவில்லை. தவறு இருக்கிறது.

 

அவர் அதை திருத்த நேரம் கொடுக்க வேண்டும். அவர் தன் திறமையை கண்டிப்பாக மேம்படுத்துவார். நல்ல விக்கெட் கீப்பர், கால்களை அங்கும் இங்கும் இயக்க வேண்டும். பந்தை நோக்கியே ஓட வேண்டும். எல்லா நேரமும் டைவ் அடிக்க வேண்டிய அவசியமில்லை. கால்களை சரியாகப் பயன்படுத்தினாலே போதும்’’ என்றார்.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் சிட்னியில் நாளைமறுநாள் (12-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் குறித்து இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோகித் சர்மா பேட்டிளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கு முன் நாங்கள் 13 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறோம். தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களுடன் செல்ல முடியுமா? அல்லது வீரர்களின் எண்ணிக்கை குறையுமா? என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

உலகக்கோப்பைக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் காயம் மற்றும் பார்ம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒன்று அல்லது இரண்டு மாற்றங்கள் வேண்டுமென்றால் இருக்கலாம்.

இந்த வருடத்தில் நாங்கள் ஏராளமான போட்டியில் விளையாட இருக்கிறோம். அதனால் காயங்கள் ஏற்படலாம். காயங்களால் வீரர்கள் இடம்பெற முடியாமல் போவதை தவிர்த்து மிகப்பெரிய அளவில் எந்த மாற்றமும் இருப்பதாக நினைக்கவில்லை. ஒவ்வொரு இடத்தையும் (Slots) பார்த்தீர்கள் என்றால், தனிப்பட்ட வீரர்களால் சிறப்பான வகையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் ஒவ்வொரு வீரர்களின் பார்ம்-ஐ பொறுத்துதான் அணியில் இடம் கிடைக்கும். இங்கிலாந்து செல்வதற்கு யாருக்கும் உத்தரவாதம் கிடையாது.

முன்னதாகவே ஆடும் லெவன் அணி குறித்து கூற இயலாது. ஆனால் நாங்கள் விளையாடும் 13 போட்டிகளில் இடம்பிடிக்கும் வீரர்களில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. ஐபிஎல் உள்பட இன்னும் நிறைய போட்டிகளில் விளையாட இருப்பதால் உலகக்கோப்பைக்கான 11 அல்லது 12 பேர் கொணட இந்திய அணியை தெரிவிப்பது கடினம்’’ என்றார். • SHARE

  விவரம் காண

  புதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி !!

  புதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த யுவராஜ் சிங், கடந்த 10ம்...

  ஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்..? சச்சின் டெண்டுல்கர் புது கருத்து !!

  ஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்..? சச்சின் டெண்டுல்கர் புது கருத்து விண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய...

  திட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை !!

  திட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை எங்கள் விளையாட்டின் மீது விமர்சனம் செய்யுங்கள், ஆனால், அத்துமீறி...

  எதற்காக ஸ்டோக்சுக்கு அப்படிப்பட்ட யார்க்கர் வீசினேன் தெரியுமா? மிட்செல் ஸ்டார்க் ஓபன் டாக்!

  ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவின் வெற்றியில் முடிய இங்கிலாந்து அணியின் பவுலிங், பேட்டிங் இரண்டும் அம்பலமாகிப் போயுள்ளது. பாகிஸ்தானிடம் வாங்கிய...

  இந்தியாவிற்கு எதிரான போட்டியில் மீண்டும் அணிக்குள் வரும் முக்கிய இங்கிலாந்து வீரர்!

  இலங்கைக்கு எதிராக தோல்வி தழுவி அரையிறுதி வாய்ப்பையும் நழுவ விட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு உத்வெகமூட்டக்கூடிய செய்தியாக அந்த...