ஆஸ்திரேலியாவின் இந்திய சுற்றுப்பயண அட்டவணை வெளியீடு!! 1
NOTTINGHAM, ENGLAND - JULY 12: India captain Virat Kohli and team mate Mahendra Dhoni discuss tactics during the 1st Royal London ODI match between England and India at Trent Bridge on July 12, 2018 in Nottingham, England. (Photo by Visionhaus/Getty Images)

 

இந்தியாவில் நடைபெறவுள்ள இந்திய-ஆஸி. அணிகள் மோதும் ஒருநாள், டி20 தொடர் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் தற்போது இறுதிக் கட்டமாக ஒரு நாள் தொடரில் ஆடவுள்ளது இந்தியா. அதன் பின்பு நியூஸிலாந்தில் 5 ஒரு நாள், 3 டி20 ஆட்டங்களில் கொண்ட தொடரில் ஆடுகிறது.

பின்னர் ஆஸ்திரேலிய அணி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

அதன் அட்டவணை
டி20 தொடர்:
முதல் டி20-பிப். 24, பெங்களூரு.
இரண்டாம் டி20-பிப். 27, விசாகப்பட்டினம்.

ஒருநாள் தொடர்:
முதல் ஆட்டம்-மார்ச். 2, ஹைதராபாத்.
இரண்டாம் ஆட்டம்-மார்ச். 5, நாக்பூர்.
மூன்றாம் ஆட்டம்-மார்ச். 8, ராஞ்சி.
நான்காம் ஆட்டம்-மார்ச். 10, மொஹாலி.
ஐந்தாம் ஆட்டம்-மார்ச். 13., தில்லி.ஆஸ்திரேலியாவின் இந்திய சுற்றுப்பயண அட்டவணை வெளியீடு!! 2

டி20 ஆட்டங்கள் இரவு 7.00 மணிக்கு தொடங்கும். ஒரு நாள் ஆட்டங்கள் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும்இதை பிசிசிஐ தற்காலிக செயலாளர் அமிதாப் செளதரி
தெரிவித்துள்ளார்.

கடந்த 1980இல் இருந்து இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இதுவரை 127 ஒரு நாள் ஆட்டங்களில் மோதி உள்ளன. இதில் 45 ஆட்டங்களில் இந்தியாவும், 72 ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளன. 10 ஆட்டங்களில் முடிவு கிட்டவில்லை.
கடந்த 1980இல் டிச. 6-இல் மெல்போர்னில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கடைசியாக நாக்பூரில் 2017 அக்.1-இல் நடைபெற்ற ஆட்டத்தில் 7விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.

ஆஸ்திரேலியாவின் இந்திய சுற்றுப்பயண அட்டவணை வெளியீடு!! 3
அதன் பின் தற்போது ஓராண்டு கழித்து இந்தியாவும்-ஆஸ்திரேலியாவும் ஒரு நாள் தொடரில் மோதுகின்றன, தோனி, ஹார்திக் பாண்டியா:
உலகக் கோப்பை 2019-ஐ கருத்தில் கொண்டு அடுத்த 4 மாதங்களில் இந்திய அணி ஏராளமான ஒரு நாள் ஆட்டங்களில் ஆட உள்ளது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஒரு நாள் தரவரிசையில் இங்கிலாந்துக்கு பின்னர் உள்ளது.

ஆஸி., நியூஸி ஒரு நாள் தொடர்களை வென்றால் இந்தியா இதிலும் முதலிடத்தை பெறும் வாய்ப்புள்ளது.ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த வீரர் தோனி, ஹார்திக் பாண்டியா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். காயத்தால் பாதிக்கப்பட்ட பாண்டியாவின் வருகை அணியை பலப்படுத்தியுள்ளது. மேலும் சிட்னி டெஸ்டில் இடம் பெறாத ரோஹித் சர்மாவும் ஒரு நாள் அணியில் இணைந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் இந்திய சுற்றுப்பயண அட்டவணை வெளியீடு!! 4
ஆனால் சிட்னி டெஸ்டில் அபாரமாக ஆடிய ரிஷப் பந்த் ஒரு நாள் அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக இரண்டாவது விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.

வலுவான முன்வரிசை பேட்டிங்: இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை ரோஹித்-ஷிகர் வலுவான தொடக்க வரிசையாக உள்ளனர். கேப்டன் விராட் கோலி, அம்பதி ராயுடு, கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், தோனி,என வலுவாய உள்ளது.
ஆல்ரவுண்டர்களாக ஹார்திக்பாண்டியா, கேதர் ஜாதவ் செயல்படுவர். பந்துவீச்சைப் பொறுத்தவரை பும்ராவுக்கு ஓய்வு தரப்பட்டதால், சிராஜ் சேர்க்கப்பட்டார். கலீல் அகமது, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, குல்தீப் யாதவ், சஹால், ஜடேஜா ஆகியோர் உள்ளனர்.
இந்திய அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ராகுல், ஷிகர் தவன், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், தோனி, ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சஹால், ரவீந்திரஜடேஜா, முகமது சிராஜ், கலீல் அகமது,முகமது ஷமி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *