மத்த எல்லாரையும் சமாளிச்சிடலாம்... ஆனால் இந்த இரண்டு வீரர்களை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்; ரசீத் கான் ஓபன் டாக் !! 1

குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான்,ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களுக்கு இந்த முறையில் தான் பந்து வீசுவேன் என்று தெரிவித்துள்ளார்.

உலகளவில் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக கருதப்படும் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

மத்த எல்லாரையும் சமாளிச்சிடலாம்... ஆனால் இந்த இரண்டு வீரர்களை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்; ரசீத் கான் ஓபன் டாக் !! 2

எப்பேர்ப்பட்ட அதிரடி பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களுக்கு எதிராக இந்த முறையில் தான் பந்து வீசுவென் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஷீத் கான் பேசுகையில், “டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டிர்க்கு பலம் மற்றும் பலவீனங்கள் உள்ளது,அதை நான் நன்கு அறிவேன். அதேபோன்றுதான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும், இவர்கள் இருவருக்கும் அதிகமான லூஸ் பால்கள் போடக்கூடாது, அப்படி அவர்களுக்கு எளிதாக நாம் பந்து வீசினால் நிச்சயம் அவர்கள் தன்னம்பிக்கையுடன் அதை எதிர் கொள்வார்கள். இப்படிப்பட்ட (loose ball) பந்தை தான் அவர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அதிரடியாக ஆடி பவுண்டரிகளை குவித்து விடுவார்கள், இப்படிப்பட்ட பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நான் பந்துவீசும் போது முன்கூட்டியே திட்டமிட்டு விடுவேன், எந்த ஒரு தவறும் இவர்களுக்கு எதிராக செய்யக்கூடாது என்று உறுதியாக பந்துவீசுவேன், அது எந்த மாதிரியான பந்தாக இருந்தாலும் என்னுடைய லைன் மற்றும் லென்தில் சரியாக வீசுவென் என்று ரஷித் கான் பேசியிருந்தார்.

மத்த எல்லாரையும் சமாளிச்சிடலாம்... ஆனால் இந்த இரண்டு வீரர்களை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்; ரசீத் கான் ஓபன் டாக் !! 3

மேலும் பேசிய அவர், நான் எப்பொழுதும் என்னைப் பற்றி யோசிக்காமல் எனது அணிக்கு வெற்றியை கொடுக்கவேண்டும் என்று தான் செயல்படுவேன், அனைத்தையும் போட்டு மனதை குழப்பிக் கொள்ளமாட்டேன், அப்படி செய்வதால் அது போட்டியில் நம்மை பாதிக்கும். மேலும் அனைத்து போட்டிகளிலும் 100% தனது அணிக்காக விளையாட வேண்டும் என்பதை மட்டும்தான் யோசிப்பேன். வெற்றி தோல்வியை தீர்மானிப்பது நம் கையில் இல்லை , ஆனால் என்னால் முடிந்ததை எனது அணிக்கு செய்வேன்,எப்பொழுதும் நான் அதிக நெருக்கடியை சந்தித்தது கிடையாது என்று ரசித் கான் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *