ஆஸ்திரேலிய தொடரை வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்புகள் அதிகம்: ஷேன் வார்ன் 1

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய அணி நேற்று புறப்பட்டுச் சென்றது. ஆஸ்திரேலிய தொடரை வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்புகள் அதிகம் என ஷேன் வார்ன் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் 3 டி20, 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. இதற்காக நேற்று கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டனர்.

பயணத்துக்கு முன்னதாக இந்திய அணி வீரர் குல்தீப் யாதவ் ட்விட்டரில் கூறும்போது, “ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் எங்களுக்கு சவாலாக இருக்கும் என்பது தெரியும். இந்த சவாலை உற்சாகத்துடன் நாங்கள் எதிர்கொள்ளவுள்ளோம். அணி வீரர்களுடன் இணைந்து ஆஸ்திரேலியாவில் விளையாடுவது சுகமான அனுபவம்” என்றார்.

இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா, கிருணல் பாண்டியா உள்ளிட்டோரும் ஆஸ்திரேலிய பயணம் குறித்து ட்விட்டரில் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.ஆஸ்திரேலிய தொடரை வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்புகள் அதிகம்: ஷேன் வார்ன் 2

முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேப்டன் விராட் கோலி கூறும்போது, “இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவில் கடுமையான சவால் காத்திருக்கிறது. எனவே இந்திய வீரர்கள் கூடுதல் பொறுப்புடன் விளையாடவேண்டும். தொடரை வெல்லவேண்டும் என்ற எண்ணத்துடன் அங்கு களமிறங்கவேண்டும்” என்றார். ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாததால் அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.வ்

அவர் இல்லாதது இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மைக் ஹசி தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்டியா இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்- மைக் ஹசிஆஸ்திரேலியா சூழ்நிலை ஹர்திக் பாண்டியாவிற்கு சிறப்பாக இருக்கும் நிலையில், அவர் இல்லாதது இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மைக் ஹசி தெரிவித்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் மாதம் 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவிற்கு ஆசிய கோப்பை டி20 தொடரின்போது இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது.ஆஸ்திரேலிய தொடரை வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்புகள் அதிகம்: ஷேன் வார்ன் 3

அதில் தற்போது ஆஸ்திரேலியா தொடர் வரை ஹர்திக் பாண்டியா இந்த அணியில் இடம்பெறவில்லை. ஆஸ்திரேலியா சூழ்நிலயில் ஹர்திக் பாண்டியா ஆட்டம் சூப்பராக எடுபடும். இந்த நிலையில் அவர் இல்லாதது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மைக் ஹசி கூறுகையில் ‘‘ஹர்திக் பாண்டியா மிகவும் திறமை வாய்ந்த வீரர். அவரது விளையாட்டு ஸ்டைல் ஆஸ்திரேலியாவின் சூழ்நிலைக்கு பொருத்தமானதாக இருக்கும். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவால் அணி சிறப்பான பேலன்ஸ் பெறும். அவர் இல்லாதது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *