வீடியோ: பேட்ஸ்மேன்களுக்கு ஷூ, வாட்டர் பாட்டில் தூக்கி வந்த முன்னாள் கேப்டன்; கொந்தளித்த ஜாம்பவான்! 1

வீடியோ: பேட்ஸ்மேன்களுக்கு ஷூ, வாட்டர் பாட்டில் தூக்கி வந்த முன்னாள் கேப்டன்; கொந்தளித்த ஜாம்பவான்!

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதிய மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின்போது, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அஹ்மத், ஷூ மற்றும் தண்ணீர் பாட்டில்கள் எடுத்த வந்த காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாக்., ஜாம்பவான் சோயிப் அக்தர்.

வீடியோ: பேட்ஸ்மேன்களுக்கு ஷூ, வாட்டர் பாட்டில் தூக்கி வந்த முன்னாள் கேப்டன்; கொந்தளித்த ஜாம்பவான்! 2

முன்னாள் கேப்டன் சப்ராஸ் அகமதுவை இப்படி ஷூ மற்றும் தண்ணீர் பாட்டில்கள்  தூக்க வைத்ததற்கு காட்டமாக விமர்சித்து பேசியது சோயிப் அக்தர் கூறுகையில்,

“முன்னாள் கேப்டன் சப்ராஸ் அகமதுவை இப்படி ஷூ மற்றும் தண்ணீர் பாட்டில்களை தூக்க வைத்ததை கண்டதும் எனக்கு ஆத்திரம் வந்தது. பாகிஸ்தான் அணியை 4 ஆண்டுகளாக இவரா வழிநடத்தி இருக்கிறார்? என கேட்கத் தோன்றியது. இந்த வகையில் தான் அவர் அணியையும் வழிநடத்தி இருக்கக்கூடும். சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று தந்த ஒரு கேப்டன் இப்படி தனது நிலை அறியாமல் இயங்கக் கூடாது. தனக்கென ஒரு அங்கீகாரம் மற்றும் சுயமரியாதையை கொண்டிருக்க வேண்டும்.

வீடியோ: பேட்ஸ்மேன்களுக்கு ஷூ, வாட்டர் பாட்டில் தூக்கி வந்த முன்னாள் கேப்டன்; கொந்தளித்த ஜாம்பவான்! 3

இவர் இப்படி இருப்பதனால் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தன்னுடைய ஆதிக்கத்தை அணியில் செலுத்திச் சென்று விட்டார்.” என காரசாரமாக அக்தர் பேசியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பாகிஸ்தான் அணியின் தற்போதைய பயிற்சியாளர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் மிஸ்பா உல் ஹக் கூறுகையில், “அணியில் இப்படி வீரர்கள் ஷூ மற்றும் தண்ணீர் பாட்டில்கள் பேட்ஸ்மேன்களுக்கு எடுத்துச் செல்வது இயல்பான ஒன்றே. அதை பெரிதுபடுத்தி பேசுவதில் எவ்வித நியாயமும் இல்லை. 12 ஆவது வீரராக அணியில் நான் இருக்கையில் பலமுறை இப்படி தண்ணீர் பாட்டில்கள் மற்றும் ஷூக்களை எடுத்துச் சென்று இருக்கிறேன். இது வேலைகளை பகிர்ந்து செய்வதே தவிர எவரும் ஆர்டர் போட்டு மற்றவர்கள் பணிந்து செய்வது அல்ல. இதனை புரிந்து கொள்ள வேண்டும்.” என பேசினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *