தோனி கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் முடியவில்லை; அடித்து சொல்லும் முன்னாள் வீரர் !! 1

தோனி கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் முடியவில்லை; அடித்து சொல்லும் முன்னாள் வீரர்

தோனியின் கிரிக்கெட் கேரியர் இன்னும் முடிந்துவிட வில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரரான விஜய் தாஹியா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான தோனி, கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் இருந்து முழுவதாக ஓரங்கட்டப்பட்டார். உலக கோப்பையுடன் தோனி ஓய்வுபெற்று விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓய்வு அறிவிக்காத தோனி, அவரது கிரிக்கெட் எதிர்கால குறித்து ஆளாளுக்கு கருத்து தெரிவித்து வரும் போதிலும், தோனியோ தொடர்ந்து மொளனம் காத்து வருகிறார்.

தோனி கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் முடியவில்லை; அடித்து சொல்லும் முன்னாள் வீரர் !! 2

 

அவர் ஓராண்டாக எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடாத சூழலில், அவரது பெயர், பிசிசிஐ-யின் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இடம்பெறவில்லை. ஆனாலும் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி தனது ஃபார்மை நிரூபித்து டி20 உலக கோப்பை அணியில் இடம்பெறும் முனைப்பில் இருப்பதாக தெரிகிறது.

தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் என்ன..? அவர் டி.20 உலகக்கோப்பையில் விளையாடுவாரா இல்லையா என்ற விவாதம் தினம் தினம் நடைபெற்று கொண்டே இருக்கும் நிலையில், தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் முடியவில்லை என முன்னாள் வீரர் விஜய் தாஹியா தெரிவித்துள்ளார்.

தோனி கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் முடியவில்லை; அடித்து சொல்லும் முன்னாள் வீரர் !! 3

இது குறித்து விஜய் தாஹியா பேசியதாவது;

தோனியுடன் ஒருவர் 30வருடம் வாழ்ந்திருந்தாலும் அவரால் கூட தோனி என்ன நினைக்கிறார் என்று கூற முடியாது. தோனியை யாராலும் அவ்வளவு எளிதாக கணித்துவிட முடியாது, அது தான் தோனி. இந்திய கிரிக்கெட் அணியை பற்றி எங்கு பேசினாலும் அங்கு தோனியை பற்றி பேசாமல் இருக்க முடியாது. தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் முடிந்துவிட வில்லை” என்று தெரிவித்துள்ளார் விஜய் தாஹியா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *