இது மட்டும் நடந்துவிட்டால் ரோஹித் சர்மாவை யாரும் தடுக்க முடியாது; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 1

இது மட்டும் நடந்துவிட்டால் ரோஹித் சர்மாவை யாரும் தடுக்க முடியாது; முன்னாள் வீரர் ஓபன் டாக்

முதல் 45 நிமிடங்கள் ரோஹித் சர்மா நிலைத்து நின்று விட்டால் அவரை அவுட்டாக்குவது மிகவும் கடினம் என முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் தாக்கத்தால் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் வீரர்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். பயிற்சிகள், போட்டிகள் எதுவும் இல்லாததால் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அதே போல் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தும், இணையதளங்களுக்கு பேட்டியளித்தும் வருகின்றனர்.

 

அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவரான வாசிம் ஜாபர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா குறித்து பல்வேறு விசயங்களை ஓபனாக தெரிவித்துள்ளார்.

இது மட்டும் நடந்துவிட்டால் ரோஹித் சர்மாவை யாரும் தடுக்க முடியாது; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 2

ரோஹித் சர்மா குறித்து வாசிம் ஜாபர் பேசியதாவது;

ஆட்டம் தொடங்கிய 30 முதல் 45 நிமிடங்கள் வரை அவருக்கு சற்று கடினமானதாக இருக்கும். அதை ரோகித் சர்மா சமாளித்து விட்டால் அவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம், டபுள் செஞ்சூரி கூட அடிக்கும் திறமை அவரிடம் உள்ளது’’ என்று வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘‘தற்போது அவரது ஆட்டத்தை முன்பைவிட தற்போது சிறப்பாக புரிந்து கொண்டுள்ளார். தற்போது உள்ள ரோகித் சர்மா இதற்கு முன் நாம் பார்த்தவர் கிடையாது. எங்கு அமைதியாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்துள்ளார்.

அடுத்த சேவாக்..

இந்திய அணியின் இளம் துவக்க வீரர்களில் ஒருவரான ப்ரிதீவ் ஷா சேவாக்கை போன்று திறமையான வீரர் என முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் ஓபனாக தெரிவித்துள்ளார் வாசிம் ஜாபர்.

இது மட்டும் நடந்துவிட்டால் ரோஹித் சர்மாவை யாரும் தடுக்க முடியாது; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 3

முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் போன்ற ஆட்டத்திறன் உடையவர் பிரித்வி ஷா. ஆனால் ஆட்டத்திற்கு வெளியே அவரது ஒழுங்கை அவர் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும். “பிரித்வி ஷா ஒரு சிறப்பான வீரர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமமும் இல்லை. அவர் அடிக்கும் ஒவ்வொரு ஷாட்களும் சிறப்பானவை. இதேபோன்று அவர் விளையாடினால் வீரேந்திர சேவாக்கை போன்று ஆட்டத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு அவருக்கு இருக்கிறது” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *