இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் வி.ஆர்.வி சிங் தனது ஓய்வு முடிவை முடிவை அறிவித்தார்.

2006-07ஆம் ஆண்டில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய வேக பந்துவீச்சாளர் வி.ஆர்.வி. சிங் , பலத்த காயமடைந்த நிலையில் நிறைவேறாத கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவெடுத்து நேற்று தனது ஓய்வுமுடிவை அறிவித்தார்.

34 வயதான வி.ஆர்.வி. சிங், 2006 ஆம் ஆண்டு மற்றும் 2007 ஆம் ஆண்டுகளுக்கு இடையே ஐந்து டெஸ்ட் போட்டிகளோடு  இரண்டு ஒருநாள் போட்டிகள் இந்திய அணிக்காக விளையாடினார், புதிய தோற்றமளித்த இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் எட்டு விக்கெட்டுகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை – காயம் காரணமாக வெளியேறியபின் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற இயலவில்லை.

CANBERRA, AUSTRALIA – JANUARY 11: VRV Singh of India bowls during day two of the tour match between an ACT Invitational XI and India at Manuka Oval on January 11, 2008 in Canberra, Australia. (Photo by Mark Nolan/Getty Images)

ரஞ்சி கோப்பையில் பஞ்சாப் அணிக்கு 2014 ஆம் ஆண்டில் அவர் தனது கடைசி பிரதிநிதி ஆட்டத்தை ஆடினார், ஜம்மு-காஷ்மீருக்கு எதிராக முதல் இன்னிங்சில் 65-2 மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 43-5 எடுத்ததன் மூலம் 29 முதல்தர ஆட்டங்களில் 121 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

“நான் திரும்பி வர முயற்சித்தேன், ஆனால் அதற்க்கு என் உடல் ஓத்துகொள்ளவில்லை, நம் உடல்களை நாம் ஒருபோதும் ஏமாற்றிவிட முடியாது. மறுவாழ்வு சிகிச்சைக்கு பிறகு … 2014 க்கு பிறகு, நான் ஒரு சில போட்டிகளிலேயே ஆடினேன். அதன் பிறகு பயிற்சி பெற்று 2018 ல் மீண்டும் விளையாட முயற்சித்தேன். ஆனால் என்னால் அதை செய்ய முடியவில்லை, அதனால் எதிர்காலத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். ஓய்வுபெற முடிவு செய்தேன் “என்று  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவேன் பஞ்சாப்  அணியில் விளையாடிய வி.ஆர்.வி. சிங் கூறினார்.

“யுவராஜ் (யுவ்ராஜ் சிங்) என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார், பிசிஏ (பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன்) என்னை ஆதரித்தது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அது நடக்கவில்லை, எனவே ஓய்வு பெறவும், என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்கவும் சிறந்தது என்று நினைத்தேன். “

இந்தியாவின் வலுவான அண்டர் -19 அணியின் ஒரு வீரராக இருந்த வி.ஆர்.வி. சிங் , 2005 ஆம் ஆண்டில் தனது பஞ்சாப் அறிமுகத்தை கொடுத்தார். 2006 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஒரு சர்வதேச ஒருநாள் போட்டியை துவங்கினார், ஆனால் அவரது முயற்சிகளுக்கு பெரிய பலன் இல்லாமல் போனது.

டெஸ்ட் அறிமுகத்தை மேற்கிந்திய தீவுகளில், விரைவில் தொடர்ந்தது, ஆனால் அது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் போலவே மோசமானதாக அமைந்தது. 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த டெஸ்ட் போட்டியில் 11 வது இடத்தில் களமிறங்கி 29 ரன்கள் எடுத்து இந்தியாவை தென்னாபிரிக்க மண்ணில் வெற்றி பெற செய்தது. இன்றளவும் பேசப்படும் ஒன்று.

“நான் அதிர்ஷ்டசாலி மற்றும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் இந்தியாவிற்கு விளையாடினேன், பல வீரர்கள் அந்த வாய்ப்பை பெறவில்லை ஆனால் நிச்சயமாக, நிறைய வருத்தங்கள் உள்ளன, நான் 19 வயதிற்கு உட்பட்டவர்கள் போட்டியில் சிறப்பாக ஆடினேன். இன்னும் இளம் வயதிலேயே எனக்கு நல்ல துவக்கம் உண்டு, ஆனால் நான் திரும்பிப் பார்க்கும்போது, இது முழுமையற்ற வாழ்க்கை, நான் என் தங்கமான ஆண்டுகளில் காயமடைந்தேன், “என்று அவர் கூறினார். • SHARE

  விவரம் காண

  யுவராஜ் சிங் அதிரடி வீண்…! மும்பை அணி தோல்வி! ட்விட்டர் ரியாக்சன்!!

  12-ஆவது ஐபிஎல் சீசனின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில்...

  வீடியோ; ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மாஸ் காட்டிய ரிஷப் பண்ட் !!

  வீடியோ; ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மாஸ் காட்டிய ரிஷப் பண்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் ருத்ரதாண்டம் ஆடியுள்ளார். ஐ.பி.எல்...

  பும்ராஹ்விற்கு ஓய்வு கொடுத்துவிடுங்கள்; ட்விட்டரில் ரசிகர்கள் வேண்டுகோள் !!

  பும்ராஹ்விற்கு ஓய்வு கொடுத்துவிடுங்கள்; ட்விட்டரில் ரசிகர்கள் வேண்டுகோள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டு பும்ராஹ்விற்கு ஐ.பி.எல் தொடர் முழுவதிலும் இருந்து ஓய்வு வழங்க...

  ரிஷப் பன்ட் பேயடி!! டெல்லி அணி 213 ரன் குவிப்பு!! ட்விட்டர் ரியாக்சன்!!

  மும்பை மற்றும் டெல்லி அணிகள் இடையேயான முதல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் ஆடும் லெவன் ரோஹித்...

  ராஜஸ்தான் vs பஞ்சாப்: ராஜஸ்தான் மண்ணில் வெல்லுமா பஞ்சாப்?

  கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்.ஆர்) இரு அணிலும் 4வது ஆட்டத்தில் மோதுகின்றன. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில்...