இந்திய அணி முன்னாள் பந்துவீச்சாளரும், தில்லி கிரிக்கெட் சங்க மூத்த தேர்வாளர் குழுத் தலைவருமான அமித் பண்டாரி, மர்ம கும்பலால் தாக்கப்பட்டு காயமடைந்தார். 23 வயதுக்குட்பட்டோர் அணிக்கு தேர்வு செய்யப்படாத வீரரின் தலைமையில் இத்தாக்குதல் நடைபெற்றது.

செயின்ட் ஸ்டீபன்ஸ் மைதானத்தில் தில்லி சீனியர் அணி திங்கள்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. வரும் 21-ஆம் தேதி தொடங்கவுள்ள தேசிய சையத் முஷ்டாக் டி20 சாம்பியன் போட்டிக்கான பயிற்சியில் அணி ஈடுபட்டிருந்தது.

அப்போது அங்கிருந்த அமித் பண்டாரியை மர்ம கும்பல் சரமாரியாக தாக்கியதில் தலை, காதுபகுதியில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


23 வயதுக்குட்பட்டோர் அணியில் தேர்வு செய்யப்படாத அனுஜ் தேதா என்ற வீரர் இத்தாக்குதலின் பின்னணியில் உள்ளது தெரியவந்துள்ளது. அணியில் சேர்க்குமாறு அமித் பண்டாரியை, வீரர் அனுஜ் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். அவருக்கு போதிய தகுதி இல்லை என பண்டாரி கூறியதால், ஆத்திரமடைந்து, குண்டர்களை தூண்டி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது என டிடிசிஏ தலைவர் ரஜத் சர்மா கூறியுள்ளார். அனுஜ் தேதாவுக்கு வாழ்நாள் தடை விதிக்க முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

23 வயதுக்கு உட்பட்ட அணி தேர்வில், அனுஜ் தேடா என்பவர் தேர்வு செய்யப்படவில்லை. இதன் காரணமாக ஆத்திரத்தில், அவர் ஏற்பாட் டில் அந்த கும்பல் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது

இந்த தாக்குதல் பற்றி அமித் பண்டாரி கூறும்போது, ‘’எனது விளக்கத்தை போலீசாரிடம் தெரிவித்துவிட்டேன். இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கும் காரணத்தையும் தாக்கியவர்கள் பற்றியும் கூறிவிட்டேன்’’ என்றார். இந்த சம்பவம் டெல்லி கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரரும் டெல்லி அணியின் முன்னாள் கேப்டனுமான வீரேந்திர சேவாக் கூறும்போது, ‘’வீரரை தேர்வு செய்யாததற்காக, பயிற்சியாளரை தாக்கிய சம்பவம் மிகவும் கீழ்த்தரமானது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நினைக்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க போதுமான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் டெல்லியை சேர்ந்தவருமான ஷிகர் தவான் கூறும்போது, ‘’அமித் பண்டாரி மீதான தாக்குதல் நம்ப முடியாததாக இருக்கிறது. இது துரதிர்ஷ்டவசமானது. அதிர்ச்சியானது, கோழைத்தனமானது. உடனடியாக இதுபற்றி விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கூறும்போது, ‘’இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்கக் கூடாது. தாக்குதலில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரருக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

  • SHARE

  விவரம் காண

  டெஸ்ட் அணியில் அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு மீண்டும் இடம் கிடைக்காது: விருதிமான் சஹா!!

  டெஸ்ட் அணியில் அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு மீண்டும் இடம் கிடைக்காது என்று கூறியுள்ளார் விருதிமான் சஹா!! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில்...

  பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட வேண்டும்; சச்சின் சொல்கிறார் !!

  பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட வேண்டும்; சச்சின் சொல்கிறார்  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடனான போட்டியை இந்திய அணி புறக்கணிக்க கூடாது என சச்சின்...

  பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுமா..?

  பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுமா..? காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்ரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ- முகமது நடத்திய தற்கொலை...

  ரிஷப் பண்ட்டை புகழ்ந்த விரக்திமான் சஹா !!

  ரிஷப் பண்ட்டை புகழ்ந்த விரக்திமான் சஹா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே இங்கிலாந்து மண்ணில் சாதனை சதமடித்து...

  அரசு சொல்வதை செய்வோம்: ரவி சாஸ்திரி!!

  புல்வாமா தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதைத் தொடர்ந்து கடும் கண்டனங்கள் பாகிஸ்தானுக்கு எதிராகக் குவிந்து வரும் நிலையில், உலகக்கோப்பைப் போட்டிகளில்...