டி.20 உலகக்கோப்பைய ஜெயிக்கனும்னா இந்த பந்துவீச்சாளர்களை எடுங்கள்; ஐடியா கொடுக்கும் முன்னாள் வீரர் !! 1

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக கோப்பை தொடரில் இந்த சுழற்பந்து வீச்சாளர்களை இந்திய அணியில் இணைத்துக் கொள்ளுங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் லால்சந்த் ராஜ்புட் அறிவுறுத்தியுள்ளார்.

2022 டி 20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு இந்திய அணி தான் உலக கோப்பையை வெல்லும் என்று பேசிப்பேசியே தகுதிச்சுற்று கூட முன்னேறாமல் இந்திய அணி தோல்வியை தழுவியது, ஆனால் இந்த முறை நிச்சயம் கோப்பையை விட்டுக் கொடுக்க கூடாது என்ற முனைப்பில் இருக்கும் இந்திய அணி தகுதியான வீரர்களை அணியில் இணைப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

டி.20 உலகக்கோப்பைய ஜெயிக்கனும்னா இந்த பந்துவீச்சாளர்களை எடுங்கள்; ஐடியா கொடுக்கும் முன்னாள் வீரர் !! 2

உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தகுதியான வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கு, நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் மிகவும் உதவியாக இருக்கிறது.

இதில் சிறப்பாக செயல்படும் வீரர்களை நிச்சயம் இந்திய அணியில் தேர்வு செய்வதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. அதேபோன்று ஆஸ்திரேலிய மைதானம் மிகவும் பெரிதாக இருப்பதால் இந்திய அணியில் அதிகப்படியான சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி.20 உலகக்கோப்பைய ஜெயிக்கனும்னா இந்த பந்துவீச்சாளர்களை எடுங்கள்; ஐடியா கொடுக்கும் முன்னாள் வீரர் !! 3

இதன் காரணமாக பலரும் எந்த சுழற்பந்துவீச்சாளர்களை இந்திய அணியில் தேர்ந்தெடுக்கலாம் என்று தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் லால்சந்த் ராஜ்புட் ஜடேஜா உட்பட 6 சுழற்பந்து வீச்சாளர்களை இந்திய அணியில் இணைக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “அனுபவ ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தான்,மேலும் இவரை தொடர்ந்து அஸ்வின் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும், என்னதான் இருந்தாலும் அனுபவம் காரணமாக அஸ்வினுக்கு தான் வாய்ப்பு அதிகம் கிடைக்கும் என்று நினைக்கிறேன், மேலும் இவர்களை அடுத்து குல்தீப் யாதவ் அல்லது அக்சர் பட்டேல் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும், குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகிய இருவருக்கும் நல்ல புரிதல் உள்ளதால் அநேகமாக இவர்கள் (kul-cha) இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று லால்சந்த் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது

Leave a comment

Your email address will not be published.