இனி பேச்சு எல்லாம் கிடையாது, அதிரடி மட்டும் தான்; ஆரோன் பின்ச் திட்டவட்டம் !! 1

இனி பேச்சு எல்லாம் கிடையாது, அதிரடி மட்டும் தான்; ஆரோன் பின்ச் திட்டவட்டம்

தொடரை முடிவு செய்யும் 3வதும் கடைசியுமான ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தனது பாணி அடித்து நொறுக்கும் வழிமுறைக்குத் திரும்பினால்தான் சரிபட்டு வரும் என்று ஆஸ்திரேலிய ஒருநாள் அணி கேப்டன் ஏரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், ‘பிஞ்சிற்குக் கொஞ்சம் இடைவெளி விட்டால் அவர் தன்னை மீண்டும் கண்டுபிடித்துக் கொள்வார்’ என்று கூறியிருப்பதால் அவர் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது.  டெஸ்ட் தொடரில் பெர்த் வெற்றி இன்னிங்ஸ் தவிர சொதப்பிய பிஞ்ச் ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் 12 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் கூறும்போது, “நான் கொஞ்சம் வெறுப்படைந்து விட்டேன். நீண்ட நேரம் ஆட வேண்டும் என்று நினைத்து ஆடுகிறேன். கடந்த 2 நாட்களாக கடைசியாக நான் சதம் அடித்த வீடியோவைப் பார்த்து என் ஆட்டத்துக்கு எது ஒத்து வரும் எது ஒத்து வராது என்பதை கண்டுபிடித்தேன்.

இனி பேச்சு எல்லாம் கிடையாது, அதிரடி மட்டும் தான்; ஆரோன் பின்ச் திட்டவட்டம் !! 2

இந்தியாவுக்கு எதிராக கடந்த 2 போட்டிகளாக கொஞ்சம் தயக்கத்துடன் தொடங்கினேன். இதனால் அழுத்தம் ஏற்பட்டது. தாக்குதல் ஆட்டத்துக்கும் அங்கு நின்று வாய்ப்புகள் வரும்போது ஆக்ரோஷம் காட்டுவது ஒரு முறை. ஆனால் நான் இன்னமும் ஒரு நல்ல ப்ளேயர் என்றே உணர்கிறேன். 13 ஒருநாள் சதங்கள் அடித்திருக்கிறேன்.. என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். அது என்னவென்றால் என்னுடைய இயல்பான ஆக்ரோஷ அதிரடி ஆட்டத்தை ஆடுவதுதான். ரன்கள் வரட்டும், சரியான ரிதம் கிடைக்கட்டும்.

இனி பேச்சு எல்லாம் கிடையாது, அதிரடி மட்டும் தான்; ஆரோன் பின்ச் திட்டவட்டம் !! 3

இந்தத் தொடரை வெல்வதுதான் இப்போதைய கவனம்” என்றார் ஏரோன் பிஞ்ச்.

கடைசி ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி;

ஆரோன் பின்ச் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஸ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், கிளன் மேக்ஸ்வெல், ஜெயி ரிச்சர்ட்சன், பீட்டர் சிடில், ஆடம் ஜம்பா, பில்லி ஸ்டான்லேகே.

கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, அம்பத்தி ராயூடு, தினேஷ் கார்த்திக், தோனி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், கலீல் அஹமது, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *