ஷமிக்கு பதிலாக சைனி; கடுப்பில் கண்டபடி பேசும் கவுதம் காம்பீர் !! 1
ஷமிக்கு பதிலாக சைனி; கடுப்பில் கண்டபடி பேசும் கவுதம் காம்பீர்

ஆஃப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி முகமது ஷமிக்கு பதிலாக நவ்தீப் சைனி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லி கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழுவினரை கவுதம் காம்பீர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கான அந்தஸ்தை பெற்ற ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, தனது டெஸ்ட் பயணத்தை இந்திய அணியுடன் இருந்து துவங்க உள்ளது. இதற்காக இந்தியா வருகிற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஜூன் 14ம் தேதி துவங்க உள்ளது.

ஷமிக்கு பதிலாக சைனி; கடுப்பில் கண்டபடி பேசும் கவுதம் காம்பீர் !! 2
Gambhir’s tweet appears to be a fiery response to the long-standing criticism over his backing of Saini

இந்நிலையில் சமீபத்தில் ஆப்கான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி இடம் பெறுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உடற்தகுதி தேர்வில் முகமது ஷமி தோல்வியடைந்ததையடுத்து இவருக்கு மாற்று வீரராக நவ்தீல் சாய்னி அணிவிக்கப்பட்டார்.

ஷமிக்கு பதிலாக சைனி; கடுப்பில் கண்டபடி பேசும் கவுதம் காம்பீர் !! 3

தற்போது இந்திய அணியில் ஷமிக்கு பதிலாக தேர்வாகியுள்ள சாய்னி, அரியானாவின் கர்னாலைச் சேர்ந்தவர். சுமார் 5 ஆண்டுகளுக்கு முன், ரஞ்சிக்கோப்பை தொடரில் டெல்லி அணிக்காக சாய்னியை டெல்லியைச் சேர்ந்தவரல்ல என்ற காரணத்தினால் டெல்லி கிரிக்கெட் சங்க அதிகாரிகள் அவரை அணியில் தேர்வு செய்ய மறுத்தனர்.

அதே சாய்னியை தற்போது இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவினர் தேர்வு செய்தனர். இதுகுறித்து காம்பிர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,‘ இந்திய கிரிக்கெட்டில் சாய்னி தேர்வு செய்யப்பட்டதற்கு பிசன்பேடி, சேட்டன் சவுகான் உள்ளிட்ட சில டெல்லி சங்க அதிகாரிகளுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பெங்களூருவில் கூட ஒரு ரோல் கருப்புப்பட்டை ரூ. 225 தான். சாய்னி ஒரு இந்தியன் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் சார்..’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published.