தோல்விகளுக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியை துறந்தார் காம்பீர்; புதிய கேப்டன் நியமனம் !! 1

தோல்விகளுக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியை துறந்தார் காம்பீர்; புதிய கேப்டன் நியமனம்

ஐ.பி.எல் டி.20 தொடருக்கான டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சீனியர் வீரர் கவுதம் காம்பீர் விலகியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த தொடருக்காக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் விலை கொடுத்து வாங்கப்பட்ட கவுதம் காம்பீர் அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

தோல்விகளுக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியை துறந்தார் காம்பீர்; புதிய கேப்டன் நியமனம் !! 2

கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த போது கொல்கத்தா அணிக்கு இரண்டு கோப்பைகளை வென்று கொடுத்த காம்பீர் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது அந்த அணியின் கூடுதல் பலமாகவே பார்க்கப்பட்டது.

ஆனால் டெல்லி டேர்டெவில்ஸ் அணியோ நடப்பு தொடரில் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வருவதன் மூலம் புள்ளி பட்டியலிலும் கடைசி இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் மட்டும் அரைசதம் அடித்த காம்பீர் அடுத்தடுத்த போட்டிகளில் 10 ரன்களை கூட தாண்டாமல் வெறும் ஒற்றை  இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து சொதப்பி வருகிறார்.

தோல்விகளுக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியை துறந்தார் காம்பீர்; புதிய கேப்டன் நியமனம் !! 3

இதன் மூலம் கவுதம் காம்பீர் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கருத்து கடந்த சில நாட்களாகவே வலுத்து வந்த நிலையில், இன்று திடீரென கவுதம் காம்பீரும் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். எஞ்சியுள்ள போட்டிகளுக்கான டெல்லி அணியின் கேப்டனாக இளம் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கவுதம் காம்பீர் “நானாகவே இந்த முடிவை எடுத்துள்ளேன், டெல்லி நிர்வாகம் என்னை கேப்டன் பதவியில் இருந்து விலக சொல்லவில்லை. கேப்டன் பதவியில் இருந்து விலக இதுவே சரியான தருணம் என்று நினைத்து தான் விலகியுள்ளேன், ஸ்ரேயஸ் ஐயர் டெல்லி அணியை வழிநடத்த உள்ளார். ஒரு அணியாக இந்த தொடரில் நிச்சயம் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published.