மும்பை அணி பவுலிங்.. மீண்டும் முக்கிய வீரர் பிளேயிங் லெவனில் இல்லை... மும்பையின் சோதனை காலம் முடியுமா? - டெல்லி, மும்பை அணிகளில் என்னென்ன மாற்றங்கள்? 1

டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பந்து வீசுகிறது மும்பை இந்தியன்ஸ் அணி. இரு அணிகளின் பிளேயிங் லெவனிலும் என்னென்ன மாற்றங்கள் இருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பௌலிங் தேர்வு செய்திருக்கிறார்.

 

மும்பை அணி பவுலிங்.. மீண்டும் முக்கிய வீரர் பிளேயிங் லெவனில் இல்லை... மும்பையின் சோதனை காலம் முடியுமா? - டெல்லி, மும்பை அணிகளில் என்னென்ன மாற்றங்கள்? 2

இரு அணிகளுக்கும் இது மிகமுக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்று லீக் போட்டிகளிலும் தோல்வியை தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவி ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. இதனால் இரு அணிகளும் தங்களது முதல் முதல் வெற்றியை எதிர்நோக்கி விளையாடுகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியை பொருத்தவரை, இப்போட்டியிலும் ஜோப்ரா ஆர்ச்சர் இடம்பெறவில்லை. ஒரு மாற்றத்துடன் களமிறங்குகிறது. ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் வெளியில் அமர்த்தப்பட்டு ரிலீ மெரிடித் உள்ளே கொண்டுவரப்பட்டிருக்கிறார்.

மும்பை அணி பவுலிங்.. மீண்டும் முக்கிய வீரர் பிளேயிங் லெவனில் இல்லை... மும்பையின் சோதனை காலம் முடியுமா? - டெல்லி, மும்பை அணிகளில் என்னென்ன மாற்றங்கள்? 3

இரண்டு மாற்றங்களுடன் களமிறங்குகிறது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. ரிலீ ரூசோவ் மற்றும் கலீல் அஹ்மத் இரண்டு பேரும் வெளியில் அமர்த்தப்பட்டு, யாஷ் துல் மற்றும் முஸ்தபிஷூர் ரஹ்மான் இருவரும் உள்ளே வந்திருக்கின்றனர்.

இரு அணிகளின் பிளேயிங் லெவன் பட்டியலை பின்வருமாறு காண்போம்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்:

டேவிட் வார்னர், பிரித்வி ஷா, மனிஷ் பாண்டே, யாஷ் துல், ரோவ்மன் பவல், அபிஷேக் போரல், அக்சர் படேல், லலித் யாதவ், குல்தீப் யாதவ், ஆண்ட்ரிக் நார்க்கியா, முஸ்தபிஷூர் ரஹ்மான்

மும்பை அணி பவுலிங்.. மீண்டும் முக்கிய வீரர் பிளேயிங் லெவனில் இல்லை... மும்பையின் சோதனை காலம் முடியுமா? - டெல்லி, மும்பை அணிகளில் என்னென்ன மாற்றங்கள்? 4

மும்பை இந்தியன்ஸ்:

ரோகித் சர்மா, இஷான் கிஷான், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, அர்ஷத் கான், ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, நேஹால் வதேரா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ரிலீ மெரிடித்.

மும்பை அணி பவுலிங்.. மீண்டும் முக்கிய வீரர் பிளேயிங் லெவனில் இல்லை... மும்பையின் சோதனை காலம் முடியுமா? - டெல்லி, மும்பை அணிகளில் என்னென்ன மாற்றங்கள்? 5

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *