சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் முதலில்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 17-ஆவது லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றனர். மகேந்திர சிங் தோனி சிஎஸ்கே அணியின் கேப்டனாக களமிறங்கும் 200ஆவது போட்டி என்பதால் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்துவீச்சு செய்வதாக முடிவெடுத்துள்ளார். சிஎஸ்கே அணியை பொறுத்தவரை இரண்டு மாற்றங்களுடன் களமிறங்குகிறது. மிச்சல் சான்ட்னர் மற்றும் பிரட்டோரியஸ் இருவரும் வெளியில் அமர்த்தப்பட்டு மகீஷ் தீக்சனா மற்றும் மொயின் அலி இருவரும் உள்ளே வருகின்றனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை, இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. அது யார் யார் என்பதை சஞ்சு சாம்சன் வெளியிடவில்லை. பிளேயிங் லெவன் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தெரிந்து கொள்ளலாம்.
சிஎஸ்கே அணி தொடர்ந்து இரண்டு வெற்றிகளுடன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. அதுவும் சேப்பாக்கம் மைதானம் என்பதால் அதிக அட்வான்டேஜ் சிஎஸ்கே அணிக்கு இருக்கிறது.
அதேநேரம் ராஜஸ்தான் அணி மிகச்சிறப்பான வெற்றியை பெற்று இப்போட்டிக்கு வந்திருக்கிறது. சிறப்பான ஃபார்மில் இருக்கும் ஜோஸ் பட்லர், யஷஷ்வி ஜெயஸ்வால் இருவரும் ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பலமாக ஓப்பனிங்கில் இருக்கின்றனர். இவர்களின் விக்கெட்டை எவ்வளவு விரைவாக சிஎஸ்கே அணி எடுக்கிறது என்பதை பொறுத்து வெற்றி தோல்வி அமையும் என்று கணிக்கப்படுகிறது.
இரு அணிகளின் பிளேயிங் லெவனின் முழு விவரங்களை பின்வருமாறு காண்போம்.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கேப்டன்), தேவ்தத் பாடிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், குல்தீப் சென், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்
சென்னை சூப்பர் கிங்ஸ்: டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி(கேப்டன்), சிசண்டா மகலா, மஹீஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங்