லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்த வீரரை எடுக்காதது இந்திய அணிக்கு மிகப் பெரும் இழப்பு; இந்திய அணி முன்னாள் வீரர் கௌதம் காம்பீர் வருத்தம் !! 1

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடி வருகிறது. 

முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த பிப்ரவரி 5-ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது.  இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 1-1 என சமநிலையில் இருக்கின்றனர்.

லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்த வீரரை எடுக்காதது இந்திய அணிக்கு மிகப் பெரும் இழப்பு; இந்திய அணி முன்னாள் வீரர் கௌதம் காம்பீர் வருத்தம் !! 2
இதையடுத்து நடைபெற இருக்கும் 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி  அகமதாபாத்தில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான “மோதிரா” மைதானத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர். இதில் 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். 

இந்த 3ஆவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி (நாளை) நடைபெற இருக்கிறது. இதில் வென்று தொடரில் முன்னிலை வகிப்பதற்கு இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து 4-வது டெஸ்ட் போட்டி மார்ச் 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த 4 டெஸ்ட் முடிவடைந்த பிறகு இங்கிலாந்து மற்றும் இந்திய அணி 5 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழக வீரர்களான வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், நடராஜன் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.

லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்த வீரரை எடுக்காதது இந்திய அணிக்கு மிகப் பெரும் இழப்பு; இந்திய அணி முன்னாள் வீரர் கௌதம் காம்பீர் வருத்தம் !! 3ஆஸ்திரேலியா தொடரை கலக்கிய வாசிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் மீண்டும் அணியில் இடம்பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்பட்டிருக்கிறது. காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விலகிய மற்றொரு தமிழக வீரர் வரும் சக்கரவர்த்தி மீண்டும் அணியில் இடம் பெற்றிருக்கிறார்.இவர்களைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் திவாதியா ஆகியோர் முதன் முறையாக சர்வதேச அணியில் இடம் பெற்றிருக்கின்றனர்.ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்க வில்லை, இது இந்திய அணிக்கு மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுபற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கூறியதாவது,ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணிக்கு விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்காதது அவருக்கு ஏற்பட்டிருக்கும் துரதிர்ஷ்டம் என்று கூறினார், மேலும் அஸ்வின் அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட தகுதியானவர் என்று கூறினார்.

இந்திய அணிக்காக மிக சிறப்பாக செயல்படும் அஸ்வீனை லிமிடெட் ஓவர் போட்டிகளில் தேர்ந்தெடுக்காததுமிகப்பெரும் முட்டாள்தனம் என்று பலரும் தெரிவித்த நிலையில் கௌதம் காம்பீர் தனது வருத்தத்தை தெரியப்படுத்திருந்தார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *