NEW DELHI, INDIA - DECEMBER 4: Cricketer Gautam Gambhir during a launch of former cricketer VVS Laxmans autobiography, 281 and Beyond Co-authored by R Kaushik, at The Claridges Hotel, on December 4, 2018 in New Delhi, India. (Photo by Prabhas Roy/Hindustan Times via Getty Images)

நானும் தோனியும் நல்ல நண்பர்கள் என கவுதம் கம்பிர் கூறியுள்ளார்.

இந்திய துவக்க வீரராக இருந்து சமீபத்தில் ஓய்வை அறிவித்த கவுதம் கம்பீர், இந்திய முன்னாள் கேப்டன் தோனியை கடுமையாக விமர்சித்துள்ளார். 2012ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் மூன்று நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் தொடரில் ஆடியது. அதில் அணியை தேர்வு செய்வதில் தோனி எடுத்த முடிவு தவறானது என்று கூறியுள்ளார். சமீபத்தில் ஆந்திராவுடனான ரஞ்சி போட்டியுடன் ஓய்வு பெற்றார் கம்பீர்.

2012ல் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் தொடரில் சச்சின் , சேவாக் மற்றும் கம்பீர் ஒரே அணியில் இடம்பெறக்கூடாது என்ற முடிவை தோனி எடுத்ததாகவும். ஆனால் அணியின் செயல்பாடு சிறப்பாக இல்லாததால் தன் முடிவை மாற்றி மீண்டும் மூவரையும் களமிறக்கினார்.தோனியின் முடிவில் தோனியே தீர்க்கமாக இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் கம்பீர் 2015ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான அணியை 2012ல் தேர்வு செய்தது தவறு, அது தன்னை அதிர்ச்சியடைய செய்ததாக கூறியுள்ளார்.

2015ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை மனதில் கொண்டு சச்சின், சேவாக், கம்பீர்  மூவரையும் ஒரே அணியில் சேர்க்கக்கூடாது என்ற முடிவை தோனி 2012ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் எடுத்தார்.

இது ஒரு கிரிக்கெட்டராக எனக்கு பெரிய அதிர்ச்சிகரமானதான இந்த விஷயம் இருந்தது. நாங்கள் மூவரும் இணைந்து ஆடுவதையே விரும்பினோம். அது அணியின் வெற்றிக்கு உதவும் என்று கூறினோம். அதற்கு உதாரணம் ஹோபர்ட்டில் நடந்த போட்டியில் சச்சினும், சேவாக்கும் துவக்க வீரர்களாக களமிறங்கினார்கள், நான் மூன்றாம் இடத்திலும், விராட் நான்காவது இடத்திலும் களமிறங்கி மிகப்பெரிய ஸ்கோரை 37 ஓவர்களில் சேஸ் செய்தோம்.

ஆனால் தொடரின் ஆரம்பத்தில் நாங்கள் இணைந்து ஆட வாய்ப்பு வழங்கப்படவில்லை. சுழற்சி முறையே பின்பற்றப்பட்டது. இந்தியா அந்த தொடரில் 8 ஆட்டங்களில் 3 ஆட்டங்களை மட்டுமே வென்றது. மேலும் இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

இந்த சம்பவம் நடந்த போதிலும் சரி, அதை காம்பீர் உறுதிப்படுத்தி அண்மையில் பேசியபோதும் சரி, தோனி – காம்பீர் இடையே பகை என்றும், தோனிக்கும் காம்பீருக்கும் பிடித்துக்கொள்ளாது என்றும் அவர்கள் இடையேயான உறவு குறித்து பல தகவல்கள் பரவுகின்றன.

இந்நிலையில், தோனியுடனான உறவு குறித்தும் பொதுவெளியில் பரவும் கருத்து குறித்தும் காம்பீர் பேசியுள்ளார். இதுதொடர்பாக விளக்கமளித்த காம்பீர், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் ஒரே ஓய்வறையை பகிர்ந்துள்ளோம். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. எங்கள் இருவருக்கும் இடையே பகை இருப்பது போன்று பேசப்படுவதெல்லாமே வதந்தி. நான் எப்போதுமே வதந்திகளை வதந்திகள் என்று நிரூபிக்க முனைந்ததோ அல்லது அதுகுறித்து விளக்கமளித்ததோ கிடையாது. வதந்திகளுக்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை என்று காம்பீர் தெரிவித்தார்.



  • SHARE

    விவரம் காண

    எதற்காக ஸ்டோக்சுக்கு அப்படிப்பட்ட யார்க்கர் வீசினேன் தெரியுமா? மிட்செல் ஸ்டார்க் ஓபன் டாக்!

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவின் வெற்றியில் முடிய இங்கிலாந்து அணியின் பவுலிங், பேட்டிங் இரண்டும் அம்பலமாகிப் போயுள்ளது. பாகிஸ்தானிடம் வாங்கிய...

    இந்தியாவிற்கு எதிரான போட்டியில் மீண்டும் அணிக்குள் வரும் முக்கிய இங்கிலாந்து வீரர்!

    இலங்கைக்கு எதிராக தோல்வி தழுவி அரையிறுதி வாய்ப்பையும் நழுவ விட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு உத்வெகமூட்டக்கூடிய செய்தியாக அந்த...

    வீடியோ: லார்ட்ஸ் பால்கனியில் ரிக்கி பாண்டிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டேவிட் வார்னர்!

    இங்கிலாந்து - வேல்ஸ் நகரங்களில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக தகுதிப் பெற்றது ஆஸ்திரேலியா....

    நான் பயந்தேனா..? கெவின் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்த இயான் மோர்கன் !!

    நான் பயந்தேனா..? கெவின் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்த இயான் மோர்கன் ஸ்டார்க்கின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயான் மோர்கன் அச்சப்பட்டதாக கூறிய கெவின் பீட்டர்சனுக்கு இயான்...

    1983 ம் ஆண்டு உலகக்கோப்பையை நினைவு கூர்ந்த ரவி சாஸ்திரி !!

    1983 ம் ஆண்டு உலகக்கோப்பையை நினைவு கூர்ந்த ரவி சாஸ்திரி உலகக் கோப்பை தொடரில் கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த...