ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்ததை தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டனான விராட் கோஹ்லியை முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கடுமையாக சாடி பேசியுள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்து, தொடரையும் இழந்துள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான அதிக முக்கியத்துவம் இல்லாத மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

நீ கேப்டனா இருந்து எந்த பிரயோஜனமும் இல்ல; கோஹ்லி மீது முன்னாள் வீரர் காட்டம் !! 2

கடந்த இரண்டு போட்டியிலும் மிக மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி, தொடரையும் இழந்ததால் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இந்திய அணியின் கேப்டனான விராட் கோஹ்லியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கோஹ்லியின் தவறான கேப்டன்சி தான் இந்திய அணியின் தோல்விகளுக்கு காரணம் என்று கூறி வருகின்றனர்.

அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீரும் கோஹ்லியின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

நீ கேப்டனா இருந்து எந்த பிரயோஜனமும் இல்ல; கோஹ்லி மீது முன்னாள் வீரர் காட்டம் !! 3

கோஹ்லியின் கேப்டன்சி குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், “எனக்கு நிஜமாகவே இது என்ன மாதிரியான கேப்டன்சி என புரியவில்லை. விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் வீழ்த்துவது குறித்த முக்கியத்துவத்தை தொடர்ந்து பேசி வருகிறோம். உங்களின் பிரதான பவுலர்களுக்கு முதல் தலா 4 ஓவர்களை வீச செய்ய வேண்டும். பின்பு ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களுக்கு பந்துவீச வாய்ப்பு வழங்க வேண்டும். ஆனால் முக்கிய பவுலர்களுக்கு வெறும் 2 ஓவர்களை வழங்கிவிட்டு, வேறு பவுலர்களை அழைப்பது சரியான அனுகுமுறையல்ல” என்றார்.

நீ கேப்டனா இருந்து எந்த பிரயோஜனமும் இல்ல; கோஹ்லி மீது முன்னாள் வீரர் காட்டம் !! 4

மேலும் பேசிய கம்பீர், “அதனால்தான் இது என்ன மாதிரியான கேப்டன்சி என்ற கேள்வி எழுகிறது. இது டி20 கிரிக்கெட் அல்ல என்பதையும் புரிந்துக்கொள்ளவேண்டும். இது ஒரு மோசமான கேப்டன்சி. இதுபோன்ற செயலுக்கு காரணம் என்னவென்றும் தெரியவில்லை. அடுத்தப் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் அல்லது ஷிவம் துபேவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அவர்கள் ஒருநாள் போட்டியில் எப்படி விளையாடுகிறார்கள் என்றும் நாம் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *