முதல் ஆறு ஓவர்களில் பந்து வீச்சில் சொதப்பியதால் தோற்றோம் : கம்பிர் 1

டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் அதிரடி காட்டிய டிவிலியர்ஸ் அரைசதம் கடந்து கைகொடுக்க பெங்களூரு அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில், 11வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. நேற்று, பெங்களூருவில் நடந்த 19வது லீக் போட்டியில் பெங்களூரு, டில்லி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

முதல் ஆறு ஓவர்களில் பந்து வீச்சில் சொதப்பியதால் தோற்றோம் : கம்பிர் 2
Virat Kohli of the Royal Challengers Bangalore and Gautam Gambhir of the Delhi Daredevils during Toss before the start of the match nineteen of the Vivo Indian Premier League 2018 (IPL 2018) between the Royal Challengers Bangalore and the Delhi Daredevils held at the M. Chinnaswamy Stadium in Bangalore on the 21st April 2018. Photo by: Deepak Malik / IPL/ SPORTZPICS

ஸ்ரேயாஸ் அரைசதம்: டில்லி அணிக்கு கேப்டன் காம்பிர் (3), ஜேசன் ராய் (5) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. உமேஷ் யாதவ் வீசிய 9வது ஓவரில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர் வீசிய 14வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் பறக்கவிட்டு, அரைசதம் கடந்தார். இவர், 52 ரன்கள் எடுத்து அவுட்டானார். மேக்ஸ்வெல் (4) ஏமாற்றினார்.

 

ரிஷாப் அபாரம்: 

யுவேந்திர சகால் வீசிய 16வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் விளாசிய ரிஷாப் பன்ட், வோக்ஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதம் கடந்தார். இவர், 85 ரன் (48 பந்து, 7 சிக்சர், 6 பவுண்டரி) எடுத்து அவுட்டானார்.

டில்லி அணி, 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு, 174 ரன்கள் எடுத்தது. ராகுல் திவேதியா (13) அவுட்டாகாமல்  இருந்தார். பெங்களூரு அணி சார்பில் சகால், 2 விக்கெட் கைப்பற்றினார்.முதல் ஆறு ஓவர்களில் பந்து வீச்சில் சொதப்பியதால் தோற்றோம் : கம்பிர் 3

டிவிலியர்ஸ் விளாசல்: சவாலான இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு மனன் வோரா (2) ஏமாற்றினார். குயின்டன் டி காக் (18) ‘ரன்–அவுட்’ ஆனார். பின் இணைந்த கேப்டன் கோஹ்லி, டிவிலியர்ஸ் ஜோடி பொறுப்பாக ஆடியது. மூன்றாவது விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்திருந்த போது கோஹ்லி (30) அவுட்டானார்.முதல் ஆறு ஓவர்களில் பந்து வீச்சில் சொதப்பியதால் தோற்றோம் : கம்பிர் 4

நதீம் வீசிய 7வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்த டிவிலியர்ஸ், ஹர்ஷல் படேல் வீசிய 13வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசி, 24 பந்தில் அரைசதமடித்தார். கோரி ஆண்டர்சன் (15) நிலைக்கவில்லை. பவுல்ட் வீசிய 18வது ஓவரில், தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்த டிவிலியர்ஸ் வெற்றியை உறுதி செய்தார்.

பெங்களூரு அணி, 18 ஓவரில், 4 விக்கெட்டுக்கு, 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டிவிலியர்ஸ் (90 ரன், 39 பந்து, 5 சிக்சர், 10 பவுண்டரி), மன்தீப் சிங் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *