கவுதம் கம்பீர்
ஹர்திக் பாண்டியாவை விட கேப்டன் பதவிக்கு இவர் தான் சரியானவர்… கவுதம் கம்பீர் அதிரடி பேச்சு

ரோஹித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாவதற்கு வாய்ப்புள்ள வீரர்கள் யார் என்பது குறித்தான தனது கருத்தை முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இருதரப்பு தொடர், முத்தரப்பு என அனைத்திலும் எதிரணிகளை இலகுவாக வீழ்த்தி கெத்து காட்டும் இந்தியா, ஐசிசி.,யால் நடத்தப்படும் பெரிய தொடர்களில் ஏனோ தொடர்ந்து சொதப்பியே வருகிறது.

ஹர்திக் பாண்டியாவை விட கேப்டன் பதவிக்கு இவர் தான் சரியானவர்... வித்தியாசமான ஐடியா கொடுக்கும் கவுதம் கம்பீர் !! 1

கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் கூட வெற்றியின் அருகில் வரை சென்ற இந்திய அணி, அதன்பிறகு நடைபெறும் பெரிய தொடர்களில் மிக மோசமான தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது.

கடந்த வருட டி.20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறிய இந்திய அணி, சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையிலும், இந்த வருடத்திற்கான டி.20 உலகக்கோப்பை தொடரில் மிக மோசமான தோல்விகளை சந்தித்தது. அடுத்த டி.20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பு இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனால் முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஹர்திக் பாண்டியா

அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீரும், இந்திய அணியின் அடுத்த கேப்டனாவதற்கு வாய்ப்புள்ள வீரர்கள் குறித்தான தனது கணிப்பை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், “கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் பெயர்தான் பரிசீலனையில் முதலிடத்தில் இருக்கும் என நம்புகிறேன். இருப்பினும், ஒருசில தொடர்களில், ஐபிஎலில் அவர் சிறப்பாக கேப்டன்சி செய்ததை வைத்து ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவியை கொடுக்க கூடாது. ஐபிஎலில் கோப்பை வென்று கொடுத்தார் என்று கூறிதான் ரோகித்திற்கு கேப்டன் பதவியை கொடுத்தோம். இப்போது புது கேப்டனை தேடுகிறோம். என்னுடைய தேர்வு பிரித்வி ஷாதான். இவரைத்தான் டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும். இவர் சையத் முஷ்டாக் அலி டி20 தொடர், விஜய் ஹசாரே தொடர், ரஞ்சிக் கோப்பை தொடர்களில் ஆக்ரோஷமாக கேப்டன்ஸி செய்ததை நான் பார்த்திருக்கிறேன். வெற்றிகரமான கேப்டனாகவும் இவர் இருக்கிறார். இவர் டி20 அணிக்கு கேப்டனாக செயல்பட பொருத்தமான வீரர்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *