அரசியல் எண்ட்ரீ குறித்து வாய் திறந்தார் கவுதம் காம்பீர்

கவுதம் கம்பீர் பாரதிய ஜனதா கட்சியில் சேர உள்ளதாக கடந்த சில தினங்களாக வைரலாக பரவிய தகவல் குறித்து கவுதம் கம்பீர் மவுனம் கலைத்துள்ளார்.

2007 மற்றும் 2017 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முறையே 75, 97 ரன்கள் என இந்திய அணியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை கெளதம் கம்பீர் பெற்றவர்.

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி தொடக்க ஆட்டக்காரராக வலம் வந்த கவுதம் கம்பீர் 2016-ம் ஆண்டுக்கு பிறகு ஓரங்கட்டப்பட்டு விட்டார். ஆனாலும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். டெல்லியை சேர்ந்த கம்பீர், விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் சில தினங்களுக்கு முன்பு அரியானாவுக்கு எதிரான கால்இறுதியில் 72 பந்தில் 104 ரன்கள் விளாசி அசத்தினார்.

2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்திலும் (75 ரன்), 2011-ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பை இறுதி ஆட்டத்திலும் (97 ரன்) கம்பீரின் பங்களிப்பை யாரும் மறந்து விட முடியாது.

இந்திய அணியில் இருந்து மட்டும் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வந்த காம்பீர், கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் இருந்து புறக்கணிப்பட்டார், இதன் எதிரொலியாக  கடந்த இரு தினங்களுக்கு முன்பு அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக வலுதுசாரி கொள்கையுடன் பேசி வரும் கம்பீர் பாரதிய ஜனதா கட்சி இணைவதற்காவும், அடுத்த வருடம் நடைபெற உள்ள லோக் சபா தேர்தலில் போட்டியிடுவதற்காகவும் தான் காம்பீர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் காட்டுத்தீயாக பரவியது.

இந்நிலையில் இந்த தகவல் குறித்து மும்பை மிரர் என்னும் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த கம்பீர், அரசியலில் குதிக்க போவதாக வெளியான தகவல் வெறும் வதந்தி மட்டுமே” என்று கூறி திட்டவட்டமாக மறுத்துள்ளார். • SHARE

  விவரம் காண

  புவனேஷ்வர் பும்ராவை மட்டுமே நாம் நம்பி இருக்கிறோம்: விவிஎஸ் லட்சுமனன்

  புவனேஸ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகிய இரண்டு பந்துவீச்சாளர்களை நாம் மிக அதிகம் நம்பியுள்ளோம். அவர்களை நோக்கியே ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும்...

  ஆசியாவின் ஹாட்டஸ்ட் மென்: டாப்-10ல் விராட் கோலி

  ஆசியாவிலேயே மிகவும் ஹாட்டாக இருக்கும் பிரபலங்களில் விராட் கோலியி முதல் 10 இடத்திற்குள் வந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு முடியும் தருவாயில் இந்த...

  மீண்டும் சொதப்பிய ராகுல், விஜய்; சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளிப்பு !!

  ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்த கே.எல் ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகியோரை சமூக வலைதளங்களில்...

  வீடியோ; கே.எல் ராகுலின் ஸ்டெம்ப்பை தெறிக்கவிட்ட ஹசீல்வுட் !!

  வீடியோ; கே.எல் ராகுலின் ஸ்டெம்ப்பை தெறிக்கவிட்ட ஹசீல்வுட் ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கே.எல் ராகுல் வெறும் 2 ரன்னில்...

  வீடியோ; ஒரு ரன் கூட எடுக்காமல் ஸ்டார்க்கிடம் ஸ்டெம்ப்பை பறிகொடுத்த முரளி விஜய் !!

  வீடியோ; ஒரு ரன் கூட எடுக்காமல் ஸ்டார்க்கிடம் ஸ்டெம்ப்பை பறிகொடுத்த முரளி விஜய் ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரன்...