ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் ஐயர் வேண்டாம்… இவரை கேப்டனாக்குங்கள்; டெல்லி அணிக்கு அட்வைஸ் கொடுத்த கம்பீர் !! 1

இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் காம்பீர் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் பொழுது டெல்லி அணி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான 2021 ஐபிஎல் தொடர் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக டைட்டில் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

அதற்கு முந்தைய போட்டியான குவாலிபயர் 2 ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல் இடையிலான போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது, இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல் அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருந்தது,ஆனால் எதிர்பாராத விதமாக தோல்வியைத் தழுவி இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை நழுவ விட்டது.

ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் ஐயர் வேண்டாம்… இவரை கேப்டனாக்குங்கள்; டெல்லி அணிக்கு அட்வைஸ் கொடுத்த கம்பீர் !! 2

அந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இருந்தது, அப்பொழுது வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி ஓவரை வீசிய ரவிச்சந்திர அஸ்வின் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், ராகுல் திரிபாதி 5வது பந்தில் சிக்ஸர் அடித்ததால் கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

என்னதான் அஸ்வின் மிக சிறந்த முறையில் செயல்பட்டாலும், டெல்லி அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் ரவிச்சந்திர அஸ்வின் தான் என்று ரவிச்சந்திர அஸ்வின் மீது சஞ்சய் மஞ்ச்ரேக்கர் போன்ற சில முன்னாள் வீரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் ஐயர் வேண்டாம்… இவரை கேப்டனாக்குங்கள்; டெல்லி அணிக்கு அட்வைஸ் கொடுத்த கம்பீர் !! 3

ஆனால் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2022 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று தனது கருத்தை பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

அஸ்வின் குறித்து பேசிய அவர், நான் ரவிச்சந்திர அஸ்வினின் மிகப்பெரிய தீவிர ரசிகன், அவர்தான் உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர் நான் சொல்வது உங்கள் எல்லாத்துக்கும் ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் என்னைப்பொறுத்தவரை 2022 ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக அஸ்வினை ஆக்க வேண்டும் என்று தெரிவித்தார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *