Cricket, Gautam Gambhir, KP Bhaskar, Delhi, DDCA

குழந்தைகள் கல்விக்காக காம்பீர் என்ன உதவி செய்தார் தெரியுமா,சுக்மா தாக்குதலில் உயிர்நீத்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளுக்கு ஆகும் கல்விச் செலவை ஏற்பதாக, கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அறிவித்துள்ளார்.

சிஆர்பிஎஃப் வீரர்கள் முகாம் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது அங்கு நக்சலைட்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.இதில், 25 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா அணி கேப்டன்  கவுதம் காம்பீர் இந்நிலையில், நக்சலைட்களால் கொல்லப்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்களது குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக கூறியிருக்கிறார்.இதுபற்றி கம்பீர் கூறுகையில் ,’’வீரமரணம் அடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் புகைப்படத்தை பத்திரிகையில் பார்த்தேன். அது மிகவும் மனதை பாதித்துவிட்டது. அவர்களின் எதிர்காலத்தை யார் கவனிப்பார்கள் என்ற கேள்வி என்னை மிகவும் சிதைத்துவிட்டது. இதனால், உயிர்நீத்த அனைத்து சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளுக்கு ஏற்படும் கல்விச் செலவை நான் ஏற்பதாக முடிவு செய்துள்ளேன். கவுதம் காம்பீர் ஃபவுண்டேஷன் சார்பாக இந்த உதவிகள் செய்யப்படும்,’’ என்று டுவிட்டரில் கம்பீர் கூறியிருக்கிறார்.

இதில் இறந்து போன சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின்போது, கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடியதும் குறிப்பிடத்தக்கது.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *