6 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் வந்து 135 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசியது மகிழ்ச்சி அளிக்கிறது என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கூறியுள்ளார். இந்நிலையில் நாளை நடைபெறும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர்

அடிலெய்டில் நாளை நடக்கும் 2-வது போட்டி வாழ்வா? சாவா? என்பதால் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அடிலெய்டில் நாளை வாழ்வா? சாவா? போட்டி: தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள்

அடிலெய்டில் நாளை நடக்கும் 2-வது போட்டி வாழ்வா? சாவா? என்பதால் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.  ஆஸ்திரேலியா – இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சிட்னியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா சதமும், டோனி அரைசதமும் அடித்தனர்.

தவான், அம்பதி ராயுடு டக்அவுட் ஆனார்கள். விராட் கோலி 3 ரன்னில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக்கும் பெரிய அளவில் பேட்டிங் செய்யவில்லை. இதனால் பேட்டிங்கில் கவனம் செலுத்தும் வகையில் விராட் கோலி, தினேஷ் கார்த்திக் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அதேபோல் சுழற்பந்து வீச்சாளரான சாஹலும் பயிற்சியில் ஈடுபட்டார்.

முதல் போட்டியில் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும், 10 ஓவரில் 46 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். பயிற்சியாளருடன் ஷமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

நாளைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை உயிரோட்டமாக வைத்துக்கொள்ளப்படும். இதனால் 2-வது இந்தியாவிற்கு வாழ்வா? சாவா? போட்டியாகும். இதனால் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷுப்மன் நியூஸிலாந்தில் வரும் 23-ஆம் தேதி தொடங்கவுள்ள ஒருநாள், டி20 தொடர்களுக்கான அணியில் இடம் பெறுவார். கடந்த 2018-இல் நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையில் சி றப்பாக ஆடி, போட்டி நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டவர். ரஞ்சி கோப்பையில் பஞ்சாப் அணி சார்பில் சிறப்பாக ஆடி 790 ரன்களை குவித்துள்ளார்.
முதலில் மயங்க் அகர்வாலை தான் லோகேஷ் ராகுலுக்கு பதிலாக சேர்ப்பதாக முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ஏற்பட்ட காயத்தால் அது இயலாமல் போய்விட்டது.

(Photo Source: PTI)

ஆல்ரவுண்டர் பாண்டியா இல்லாத நிலையில் முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
விஜய் சங்கர்: இந்திய ஏ அணியில் 5-ஆம் நிலையில் ஆடியது என்னை இந்திய அணியில் மீண்டும் சேர்க்க உதவியுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக எனது திறமையை வெளிப்படுத்த வேண்டியிருந்தது. தற்போது நான் மனதளவில் வலிமையாக உள்ளேன். ஆட்டத்தின் இறுதியில் நெருக்கடியான கட்டத்தை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வேன். ஏ அணியில் 5-ஆம் நிலை பேட்ஸ்மேனாக ஆட பயிற்சியாளர் திராவிட் என்னை அறிவுறுத்தியது மிகவும் உதவியாக அமைந்தது. நியூஸி ஏ. அணியுடன் நடந்த தொடரில் சிறப்பான அனுபவம் கிடைத்தது. தேவையான நேரத்தில் 5 அல்லது 6 ஓவர்கள் கூட வீசுவேன் வரும் உலகக் கோப்பை 2019 குறித்து கவலைப்படவில்லை. அது தேவையில்லாத அழுத்தத்தை தரும் என்றார்.

ஷுப்மன் கில்: இந்திய சார்பில் அறிமுகம் ஆவதற்கு நியூஸிலாந்தை தவிர சிறந்த இடம் ஏதுமில்லை. 12 மாதங்களுக்கு முன்பு இங்கு நடந்த ஐசிசி 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை போட்டியில் சிறந்த போட்டி நாயகன் விருது பெற்றேன். நியூஸிலாந்து சுற்றுப்பயணத்தில் சிறப்பாக ஆட முடியும். இந்திய அணியில் இடம் பெற்று ஆடும்போது ஏற்படும் அழுத்தத்தை மட்டுமே சமாளிக்க வேண்டும். இரவு தான் எனக்கு தகவல் தெரிந்தது. இதனால் எனது இருதய துடிப்பு மிகவும் அதிகரித்தது, உடனே சென்று தந்தையிடம் தெரிவித்தேன்.
கடந்த ஓராண்டு எனக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்தது. ஐபிஎல், ரஞ்சி கோப்பை ஆட்டங்களில் போதிய வாய்ப்பு கிடைத்தது என்றார். • SHARE

  விவரம் காண

  உலகக்கோப்பையில் நானும் விளையாடுவேன்; ஸ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை !!

  உலகக்கோப்பையில் நானும் விளையாடுவேன்; ஸ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை 2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தான் இடம்பிடிப்பேன் என இளம் வீரர் ஸ்ரேயஸ் ஐயர்...

  ஹர்திக் பாண்டியா மீண்டும் அணியில் இடம்பிடிக்க வேண்டும்; அஜித் அகார்கர் விருப்பம் !!

  ஹர்திக் பாண்டியா மீண்டும் அணியில் இடம்பிடிக்க வேண்டும்; அஜித் அகார்கர் விருப்பம் ஹர்திக் பாண்டியா விரைவில் அணிக்கு திரும்ப வேண்டுமென இந்திய அணியின் முன்னாள்...

  விராட் கோஹ்லியின் சாதனையை காலி செய்த ஹசீம் ஆம்லா !!

  விராட் கோஹ்லியின் சாதனையை காலி செய்த ஹசீம் ஆம்லா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக 27 சதங்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் விராட்...

  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம்: ரவி சாஸ்திரி

  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம் என இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டெய்லி...

  தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் !!

  தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் தனக்கு பாண்டிங் எப்படியோ அப்படித்தான் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு தோனியின் ஆலோசனை தேவை என்று ஆஸ்திரேலிய...