பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

வெற்றிக்கு இவர்கள் தான் காரணம்; சென்னை கேப்டன் தோனி பெருமிதம் !! 1

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு அந்த அணியின் கேப்டன் கோஹ்லி 50 ரன்களும், டிவில்லியர்ஸ் 39 ரன்களும் எடுத்து கை கொடுத்தாலும், மற்ற வீரர்கள் அனைவரும் சென்னை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியதாலும், ஒருவர் கூட அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாதலாலும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்த பெங்களூர் அணி வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அபாரமாக பந்துவீசிய சாம் கர்ரான் 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

வெற்றிக்கு இவர்கள் தான் காரணம்; சென்னை கேப்டன் தோனி பெருமிதம் !! 2

இதனையடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய டூபிளசி 13 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 25 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய அம்பத்தி ராயூடு 39 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், போட்டியின் இறுதி வரை நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணியின் மற்றொரு துவக்க வீரரான ருத்துராஜ் கெய்க்வாட் 65 ரன்களும், கடைசி நேரத்தில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி 19 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 18.4 ஓவரிலேயே இலக்கை எட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வெற்றிக்கு இவர்கள் தான் காரணம்; சென்னை கேப்டன் தோனி பெருமிதம் !! 3

பெங்களூர் அணியுடனான இந்த வெற்றி குறித்து சென்னை அணியின் கேப்டனான தோனி பேசியதாவது;

இந்தப் போட்டியில் எல்லாமே சிறப்பாக அமைந்தது. திட்டமிட்டப்படி எல்லாம் நடந்தது. முதலில் பவுலிங் சிறப்பாக இருந்தது. சீரான இடைவெளியில் நாங்கள் பெங்களூர் விக்கெட்டுகளை எடுத்தோம். பிட்ச் ஸ்லோவாக இருந்தது. இந்தத் தொடரில் நாங்கள் சீரான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. ஆனால் இன்று அது நடந்தது. ருதுராஜ் சிறப்பாக விளையாடினார். அவருக்கு எப்போது ஷாட்ஸ் ஆட வேண்டும் என்று தெளிவாக தெரிந்திருக்கிறது. புள்ளி பட்டியலை பற்றி கவலைப்படாமல் கிரிக்கெட்டை என்ஜாய் செய்து விளையாட வேண்டும். அப்படி இல்லையெனில் ஒவ்வொரு போட்டியின் முடிவும் உங்களை காயப்படுத்தும். இந்தப் போட்டியில் இளம் வீரர்கள் சிறப்பான பங்களிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *