யார் சொன்னாலும் இந்த ஒரு விசயத்த மட்டும் மாத்திடாதடா தம்பி... உம்ரன் மாலிக்கிற்கு முக்கியமான அட்வைஸ் கொடுத்த முன்னாள் ஜாம்பவான் !! 1

நல்லா பந்து வீசுறதுக்கு கடின முயற்சி செய்யுங்கள் அதற்காக வேகத்தை குறைக்க வேண்டாம் என்று கிளன் மெக்ராத் உம்ரான் மாலிக்கிர்க்கு அறிவுரை வழங்கியுள்ளார்

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் புகழின் உச்சிக்கே சென்ற இந்திய அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், தன்னுடைய அசுர வேகத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சின்னாபின்னமாக சிதறடித்தார்.

யார் சொன்னாலும் இந்த ஒரு விசயத்த மட்டும் மாத்திடாதடா தம்பி... உம்ரன் மாலிக்கிற்கு முக்கியமான அட்வைஸ் கொடுத்த முன்னாள் ஜாம்பவான் !! 2

மிக எளிதாக 150+kmph வேகத்தில் பந்து வீசும் திறமை படைத்த இவர் 2022 ஐபிஎல் தொடரில், தொடர்ச்சியாக 14 போட்டிகளில் அதிவேக பந்து வீசி 14 வேகமான பந்திர்கான அவார்டை பெற்றுள்ளார்.மேலும் இந்த ஐபிஎல் தொடரில் 157 kmph வேகத்தில் பந்து வீசி அதிவேகமான பந்து என்ற இடத்தில் 2வது இடத்தை பிடித்துள்ளார்.முதல் இடத்தில் லக்கி பெர்குசன் 157.3kmph இடம் பிடித்துள்ளார்.

 

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன்மூலம் சர்வதேச இந்திய அணியில் விளையாட இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது,ஆனால் இவர் தனக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை, உம்ரான் மாலிக் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு பக்குவம் தேவை என்று அவரை அணியிலிருந்து இந்திய அணி நிர்வாகம் நீக்கியுள்ளது.

யார் சொன்னாலும் இந்த ஒரு விசயத்த மட்டும் மாத்திடாதடா தம்பி... உம்ரன் மாலிக்கிற்கு முக்கியமான அட்வைஸ் கொடுத்த முன்னாள் ஜாம்பவான் !! 3

இந்த நிலையில் உம்ரான் மாலிக் சிறப்பாக செயல்படவேண்டும் என்று முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் அவருக்கு தங்களுடைய அறிவுரைகளை கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் கிளன் மெக்ராத்,உம்ரான் மாலிக்கின் லைன் அண்ட் லென்த்தில் பந்துவீச வேகத்தை குறைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

யார் சொன்னாலும் இந்த ஒரு விசயத்த மட்டும் மாத்திடாதடா தம்பி... உம்ரன் மாலிக்கிற்கு முக்கியமான அட்வைஸ் கொடுத்த முன்னாள் ஜாம்பவான் !! 4

இதுகுறித்து மெக்ராத் பேசுகையில், “தற்போது உம்ரன் மாலிக்கை அதிகமாக விளையாடி பார்க்க முடிவதில்லை, ஆனால் அவருடைய வேகம் ஈர்க்கக்கூடிய ஒன்றாக உள்ளது. சுத்தமான வேகம் என்றாலே தனித்துவமான ஒன்றாகும், ஒருவரை 150+ வேகத்தில் வந்து வீசுவதற்கு பயிற்றுவிக்க முடியாது அது இயற்கையாகவே வர வேண்டும் சிலர் பந்தில் கண்ட்ரோல் கிடைக்க வேண்டும் என்று வேகத்தை குறைக்கின்றனர். அதை பார்த்தாலே எனக்கு வெறுப்பாக உள்ளது, பந்துவீச்சில் கட்டுப்பாடு வேண்டுமென்றால் கடினமாக உழைக்க வேண்டும், அதிக நேரம் வலைப் பயிற்சியில் ஈடுபட வேண்டும், ஏனென்றால் 150+வேகத்தில் பந்து வீசுவது சாதாரண விஷயம் கிடையாது, அதை வீணடித்து விடக்கூடாது, தற்போது நாம் வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம், நாம் வேரியேஷன்கள் வீசும் பந்திவீச்சாளர்களை எளிதாக பார்த்து விடலாம், ஆனால் உங்களால் 130kph வேகத்தில் பந்து வீசும் ஒருவரை 150kph பந்து வீச வைக்க முடியாது, அதே போன்று ஒரு வேகப்பந்து வீச்சாளர் கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும் அந்த பயிற்சி நம் உடல் முழுவதும் வலியை ஏற்படுத்தும், அதைவிட முக்கியம் மனதளவிலும் வேகப்பந்துவீச்சாளர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கிளன் மெக்ராத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.