இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் என்ற கருத்தால் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.  இந்திய அணி கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இவர் நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்த நாள் அன்று தனக்கு சொந்தமான ‘APP’ ஒன்றை வெளியிட்டதாக கூறப்படுதில். அதில் ‘‘நீங்கள் இந்தியாவில்தான் வாழ வேண்டும் என்று நினைக்கவில்லை. செல்லுங்கள். வேறு எங்காவது சென்று வாழுங்கள். ஏன் இந்தியாவில் இருந்து கொண்டு மற்ற நாடுகளை விரும்புகிறீர்கள்.

இதைக்கூறுவதால் என்னைப் பிடிக்காது என்பது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால், இங்கு வசித்துக் கொண்டு மற்ற நாடுகளையும், அங்குள்ள விஷயங்களையும் விரும்புவதை என்னால் நினைக்க முடியவில்லை. உங்களுடைய முன்னுரிமையை சரிதாக்கிக்கொள்ளுங்கள்’’ என்று கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த கருத்தால் டுவிட்டரில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் விராட் கோலிக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்து வருகிறார்கள்.

தன்னை விமர்சித்த ரசிகரை வெளிநாட்டுக்குச் செல்லுமாறு கூறிய விராத் கோலியின் வீடியோ பதிவு இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் சிறந்த பேட்ஸ்மன்களில் ஒருவராக விராத் கோலி திகழ்கிறார். இந்திய அணியில் அவர் தொடர்ச்சியாக பாஃர்மில் உள்ளார். சச்சின் உள்ளிட்ட பலரின் சாதனைகளை முறியடித்து வருகிறார். 216 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 38 சதம், 48 அரைசதங் களுடன் 10,232 ரன் குவித்துள்ளார். அதேபோல், 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 24 சதம், 19 அரைசதங்களுடன் 6331 ரன் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் 2102 ரன்னும், ஐபிஎல் போட்டிகளில் 4948 ரன் எடுத்துள்ளார். சமீப காலமாக அவர் மிரட்டி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ஹாட்ரிக் சதம் அடித்தார்.

இந்நிலையில், ரசிகர் ஒருவரின் கேள்விக்கு விராத் கோலி அளித்த பதில் சர்ச்சைக்குள்ளானது. இதுதொடர்பாக அவர் பேசிய வீடியோவில், ரசிகர் ஒருவர் தெரிவித்த கருத்தை படித்து காட்டுகிறார். “விராத் அதிகமாக விளம்பரப்படுத்தப்படுகிறார். அவருடைய பேட்டிங்கில் எதுவும் சிறப்பாக இல்லை. எனக்கு இந்தியர்களை விட, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தைப் பார்க்கவே பிடிக்கும்” என அந்த ரசிகர் கூறியுள்ளார்.

 

ரசிகரின் அந்தக் கேள்விக்கு பதிலளித்த விராத், “நீ இந்தியாவில் வாழக்கூடாது என நினைக்கிறேன். வேறு நாட்டிற்குச் சென்று ஏன் வாழ்க்கை நடத்தக் கூடாது?. மற்ற நாடுகளை நேசித்தால், எதற்கு நமது நாட்டில் இருக்கிறாய்? என்னைப் பிடிக்கவில்லை என்பது பற்றி கவலையில்லை. மற்ற நாட்டு வீரர்களை பிடித்தால், நீ நம் நாட்டில் வாழக்கூடாது. உனக்கு எது முதன்மையானது என்பதை தேர்ந்தெடு” என கடுமையாகத் தாக்கி பேசியுள்ளார்.

 

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது இந்தக் கருத்துக்கு கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. ’விராத் கோலி ரசிகர்களுடன் அதிக நேரம் செலவழிப்பதில்லை’, “இப்படியொரு கருத்தை விராத்திடம் இருந்து எதிர்பார்க்கவில்லை”, “மற்ற நாட்டு வீரர்களை ரசிப்பது என்பது, இந்தியா வை வெறுப்பது ஆகாது”, “வெளிநாட்டு பொருட்களை விளம்பரம் செய்கிறார், இத்தாலியில் திருமணம் செய்தார், வெளிநாட்டு தண்ணீரை குடிக்கிறார்” என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை ரசிகர்கள் அள்ளி தெளித்து வருகின்றனர்.

 

இந்திய ரசிகர்களை பொருத்தவரை பல்வேறு நாட்டு வீரர்கள் மீதும் அதிக பாசம் வைப்பார்கள். பிரைன் லாரா, ஸ்டீவ் வாஹ், வாசிம் அக்ரம், முரளிதரன், ஏபி டிவில்லியர்ஸ், ஷேன் வார்ன் உள்ளிட்ட பல்வேறு வீரர்களை இந்திய ரசிகர்களுக்கு பிடிக்கும். அதே போல், சச்சின், தோனி உள்ளிட்டோருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். விராத் கோலிக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் விராத் இப்படி கருத்துத் தெரிவித்திருப்பதை அவரது ரசிகர்கள் விரும்பவில்லை.

 

இந்நிலையில் அணியின் கேப்டனாக இருந்துகொண்டு விராத் கோலி இப்படி பேசியிருப்பது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அனிருத் சவுதாரி இதுபற்றி கூறும்போது, ‘கிரிக்கெட் வாரியம் ரசிகர்களை மதிக்கிறது. அவர்களின் தேர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். நான் சுனில் கவாஸ்கர் பேட்டிங்கை ரசிப்பேன். அதோடு விவியன் ரிச்சர்ட்ஸ், கிரீனிட்ஸ், தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ் ஆடுவதையும் ரசிப்பேன். சச்சின், சேவாக்கை போலவே, மார்க் வாஹ், பிரைன் லாரா உட்பட பலரின் ஆட்டங்களை ரசிப்பேன். நாடு மற்றும் அரசியலைக் கடந்தது சிறப்பான கிரிக்கெட்டை மதிக்கும் பண்பு வேண்டும் என நினைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

 

பெயர் குறிப்பிடாத மற்றொரு அதிகாரி, ‘ரசிகர்களை வெளிநாட்டுக்கு செல்ல சொல்லும் விராத் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இல்லை யென்றால், புமா (Puma) போன்ற நிறுவனங்கள் நூறு கோடி ரூபாய்க்கு அவரிடம் ஒப்பந்தம் செய்ய விரும்பாது. சர்வதேச நிறுவனங்கள் விளம்பர ஒப்பந்தங்களை நிறுத்தினால், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருமானம் வீழும். அது வீரர்களின் ஊதியத்தையும் பாதிக்கும். இப்படி கூறியிருப் பதன் மூலம் தனது ஒப்பந்தத்தையும் கோலி மீறியிருக்கிறார். விராத் சிறந்த வீரர். அவர் சிறந்த மனிதராகவும் மாற முயற்சிக்க வேண்டும்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார். • SHARE

  விவரம் காண

  ஐ.பி.எல் 2019; விலைபோக வாய்ப்பில்லாத ஐந்து முக்கிய வீரர்கள் !!

  ஐ.பி.எல் 2019; விலைபோக வாய்ப்பில்லாத ஐந்து முக்கிய வீரர்கள் கடந்த 2008ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து...

  2019ம் ஆண்டு உலகக்கோப்பையை தென் ஆப்ரிக்கா வெல்லும்; டிவில்லியர்ஸ் நம்பிக்கை !!

  2019ம் ஆண்டு உலகக்கோப்பையை தென் ஆப்ரிக்கா வெல்லும்; டிவில்லியர்ஸ் நம்பிக்கை அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை தென் ஆப்ரிக்கா அணி...

  ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்க காத்திற்கும் 5 வீரர்கள்!

  ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்க காத்திற்கும் 5 வீரர்கள்! 2019-ம் ஆண்டு நடைபெறும் 12-வது சீசன் ஐபிஎல் போட்டிக்காக ராஜஸ்தான் அணி பல்வேறு மாற்றங்களைச்...

  ஆஸ்திரேலியா தொடரில் பும்ராஹ் மாஸ் காட்டுவார்; முன்னாள் வீரர் ஆரூடம் !!

  ஆஸ்திரேலியா தொடரில் பும்ராஹ் மாஸ் காட்டுவார்; முன்னாள் வீரர் ஆரூடம் ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய பந்துவீச்சாளர் பும்ராஹ் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கடும்...

  என்னை தக்க வைத்ததன் மூலம் ஆச்சரியம் அடைந்தேன்: கமலேஷ் நாகர்கோட்டி

  2019-ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு தயாராகி வரும் அணிகள், தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொண்டும், மற்றவர்களை விடுவித்தும் வருகின்றன. அதன் பட்டியல்...