247 ரன்களில் சுருண்டது இந்தியா… தென் ஆப்ரிக்காவிற்கு 241 ரன்கள் டார்கெட் !! 1
247 ரன்களில் சுருண்டது இந்தியா… தென் ஆப்ரிக்காவிற்கு 241 ரன்கள் டார்கெட்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்ரிக்கா அணியின் வெற்றிக்கு 241 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்து 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தென் ஆப்ரிக்காவின் ஜோகன்ஸ்பெர்கில் நடைபெற்று வருகிறது.

247 ரன்களில் சுருண்டது இந்தியா… தென் ஆப்ரிக்காவிற்கு 241 ரன்கள் டார்கெட் !! 2

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணிக்கு,  கேப்டன் கோஹ்லி 54 ரன்களூம், புஜாரா 50 ரன்களும், புவனேஷ்வர் குமார் 30 ரன்களும் எடுத்து கைகொடுத்தாலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் தனது முதல் இன்னிங்ஸில் 187 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு ஆம்லா 61 ரன்கள் எடுத்து கைகொடுத்ததன் மூலம் தென் ஆப்ரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பும்ராஹ் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

247 ரன்களில் சுருண்டது இந்தியா… தென் ஆப்ரிக்காவிற்கு 241 ரன்கள் டார்கெட் !! 3

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய பார்தீவ் பட்டேல் 16 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். இதன் மூலம் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்த இந்திய அணி 49 ரன்கள் எடுத்திருந்தது.

மூன்றாம் நாளான இன்றைய நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில், கே.எல் ராகுல் 16 ரன்னிலும், புஜாரா 1 ரன்னிலும் விக்கெட்டை இழந்து வெளியேறினர். சிறிது நேரம் தாக்குபிடித்த மற்றொரு துவக்க வீரரான முரளி விஜய்யும் 127 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். அதன் பின் கோஹ்லியும் 41 ரன்களிலும் ஹர்திக் பாண்டியா 4 ரன்னிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.

247 ரன்களில் சுருண்டது இந்தியா… தென் ஆப்ரிக்காவிற்கு 241 ரன்கள் டார்கெட் !! 4

இதனையடுத்து ஜோடி சேர்ந்த ரஹானே – புவனேஷ்வர் குமார் கூட்டணி, தென் ஆப்ரிக்காவின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு சீரான இடைவேளையில் பவுண்டரிகள் அடித்து பொறுமையாக ரன் சேர்த்து, இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.

ரஹானே 48 ரன்னிலும், புவனேஷ்வர் குமார் 33 ரன்களும் எடுத்து அரைசத  வாய்ப்பை தவறவிட்டனர்.

247 ரன்களில் சுருண்டது இந்தியா… தென் ஆப்ரிக்காவிற்கு 241 ரன்கள் டார்கெட் !! 5

இதன் பின் வந்த முகமது ஷமி 27 ரன்னிலும், பும்ராஹ் ரன் எதுவும் எடுக்காமலும் விக்கெட்டை இழந்ததன் மூலம் 247 ரன்கள் எடுத்த போது இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

இதன் மூலம் தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு 241 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published.