ஆமை வேகத்தில் விளையாடிய சீனியர் வீரர்; வச்சு செய்யும் நெட்டிசன்கள் !! 1

ஆமை வேகத்தில் விளையாடிய சீனியர் வீரர்; வச்சு செய்யும் நெட்டிசன்கள்

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆமை வேகத்தில் விளையாடிய விர்திமான் சஹா சமூகவலைதள ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகின்றன.

துபாயின் அபுதாபியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், மற்ற கேப்டன்களை போன்று பந்துவீச்சை தேர்வு செய்யாமல் தில்லாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆமை வேகத்தில் விளையாடிய சீனியர் வீரர்; வச்சு செய்யும் நெட்டிசன்கள் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிங்கிய ஹைதிராபாத் அணிக்கு ஜானி பாரிஸ்டோவும், டேவிட் வார்னரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

இதில் பாரிஸ்டோ 5 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும் மற்றொரு துவக்க வீரரான டேவிட் வார்னர் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடினார்.

டேவிட் வார்னர் போன்ற அதிரடி ஆட்டக்காரர் நீண்ட நேரம் களத்தில் நின்றிருந்தாலும் ஹைதிராபாத் அணியால் பெரிதாக ஸ்கோர் செய்ய முடியவில்லை. மற்றொரு வீரரான மணிஷ் பாண்டே சீரான இடைவேளையில் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்த போதிலும் முதல் 10 ஓவருக்கு ஹைதராபாத் அணி 50 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆமை வேகத்தில் விளையாடிய சீனியர் வீரர்; வச்சு செய்யும் நெட்டிசன்கள் !! 3

அடித்து விளையாட திணறிய டேவிட் வார்னர் 36 ரன்களிலும், மணிஷ் பாண்டே 51 ரன்களிலும் விக்கெட்டை இழந்து வெளியேறினர். பின்வரிசையில் வந்த சஹா 30 ரன்களும், நபி 11 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி வெறும் 142 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

ஆமை வேகத்தில் விளையாடிய சீனியர் வீரர்; வச்சு செய்யும் நெட்டிசன்கள் !! 4

இந்தநிலையில், இந்த போட்டியில் டி.20 போட்டி என்பதை மறந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது போல் 31 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் விர்திமான் சஹாவை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

அதில் சில இங்கே;

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *