ஆஸ்திரேலிய உலககோப்பை அணியில் இருந்து இரு முக்கிய வீரர்களுக்கு இடம் மறுப்பு!! வார்னர், ஸ்மித் நிலை?? 1

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் இருவரும் மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் உலக கோப்பை தொடருக்கு இணைவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால், ஏற்கனவே அணியில் இருந்த இரண்டு முக்கிய வீரர்களை நீக்க வேண்டிய சூழ்நிலை ஆஸ்திரேலிய நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஹேசல்வுட் மற்றும் ஹண்ட்ஸ்க்கோம் இருவரும் 15 வீரர்கள் கொண்ட உலக கோப்பை அணியில் இருந்து நீக்கப்படும் வீரர்களாக இருக்கலாம் என தெரிகிறது.

ஆஸ்திரேலிய உலககோப்பை அணியில் இருந்து இரு முக்கிய வீரர்களுக்கு இடம் மறுப்பு!! வார்னர், ஸ்மித் நிலை?? 2

வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் மற்றும் ஹண்ட்ஸ்க்கோம் இருவரின் சமீபத்திய செயல்பாடு ஆஸ்திரேலிய நிர்வாகத்திற்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால் ஷான் மார்ஷ் மற்றும் ரிச்சர்ட்ஸன்  இருவரும் அவர்களுக்கு பதிலாக அணியில் இடம் பெறுகிறார்கள் என்கிற தகவலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் அடிபடுகின்றன.

மேலும், வார்னர் மீண்டும் அணிக்கு வருவதால் துவக்க வீரர் கவஜாவின் நிலை சற்று கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக, வார்னர் உடன் கவாஜா, ஷான் மார்ஷ், ஹண்ட்ஸ்க்கோம் இவர்களில் யார் துவங்குவார்கள்.. யாரை நீக்குவது?என்கிற தலைவலியும் ஏற்பட்டுள்ளது.

கவாஜா இந்த ஆண்டு துவக்க வீரராக மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதுவரை 769 ரன்கள் இந்த ஆண்டில் மட்டும் அடித்துள்ளார். சராசரியாக 59 ரன்களும் கொண்டுள்ளார். இந்திய அணிக்கு எதிரான தொடரில் இரண்டு சதங்களை அடித்து அசத்தினார்.

ஆஸ்திரேலிய உலககோப்பை அணியில் இருந்து இரு முக்கிய வீரர்களுக்கு இடம் மறுப்பு!! வார்னர், ஸ்மித் நிலை?? 3

ஹண்ட்ஸ்க்கோம் இந்திய அணிக்கு எதிரான தொடரில் மொஹாலில் சதம் அடித்தார். அதன்பிறகு ஒரு அரைசதம் அடித்தார். ஆனால், துரதிஸ்டவசமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இவரால் ஒரு போட்டியில் கூட 50 ரன்களை கடக்க முடியவில்லை. இதுவே இவரது உலகக்கோப்பை அணியின் இடத்திற்கு கேள்விக்குறியாகியுள்ளது.

இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஹேசல்வுட் காயம் காரணமாக ஆட முடியவில்லை. தற்பொழுது ஓரளவுக்கு குணம் அடைந்து விட்டாலும் உலக கோப்பை தொடரில் முழுமையாக அவரால் செயல்படும் முடியுமா? என்பது தெரியாத காரணத்தினால் அணியில் இடம் பெறுவது சந்தேகம் ஆகியுள்ளது.

அஷ்டன் அகர், ஆண்ரூ டை, ஸ்டான்லாக் ஆகியோரின் இடமும் அணியில் சந்தேகம் தான். மேலும், இவர்கள் அணியின் ஒப்பந்தத்திலும் இந்த ஆண்டு இடம்பெறவில்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *