தல தோனி எப்பவும் மாஸ் தான்; ஹர்பஜன் சிங் புகழாரம்

பஞ்சாப் அணியுடனான போட்டியில் தனி ஒருவனாக மாஸ் காட்டிய சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கம் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் நேற்றைய போட்டியில் தோனி தலைமயிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 57 ரன்கள் எடுத்து கைகொடுத்தன் மூலம் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 197 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை அணிக்கு சேன் வாட்சன் (11), முரளி விஜய் (12) என சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர். இதன் பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம் பில்லிங்ஸும் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு கூட்டணி சேர்ந்த தோனி – அம்பத்தி ராயூடு கூட்டணி நிதானமாக விளையாடி பொறுமையாக ரன் சேர்த்தது. அம்பத்தி ராயூடு 49 ரன்கள் எடுத்த போது ரன் அவுட்டாகி வெளியேறினார், அடுத்த வந்த ஜடேஜாவும் 19 ரன்னில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும் தொடர்ந்து தனது பொறுப்பை உணர்ந்து விளையாடிய தோனி கடைசி 20 பந்துகளுக்கு 60 ரன்கள் தேவை என்ற நிலையிலும் சிக்ஸர்களாக பறக்கவிட்டு கடைசி ஒரு ஓவருக்கு 17 ரன்கள் தேவை என்ற நிலை வரை சென்னை அணியை அழைத்து வந்தார்.

போட்டியின் வெற்றியை தீர்மானிக்கும் இந்த கடைசி ஓவரில் தோனி 12 ரன்கள் மட்டுமே எடுத்ததால் சென்னை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

சென்னை அணி இந்த போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும் தன் மீதான ஒட்டுமொத்த விமர்சனத்திற்கும் இந்த ஒரே போட்டியில் தனது பேட் மூலம் சரியான பதிலடி கொடுத்த தோனியை கிரிக்கெட் உலகமே(அஸ்வினை தவிர) கொண்டாடி வருகின்றது.

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ஹர்பஜன் சிங்கும் தோனியை தனது ட்விட்டர் பக்கம் மூலம் பாராட்டியுள்ளார்.

இது குறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட்டில் “OLD IS GOLD” என்ற பழமொழியை வைத்து தோனியை பாராட்டியுள்ளார். அதே போல் வெற்றி பெற்ற பஞ்சாப் அணிக்கும் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.



  • SHARE

    விவரம் காண

    இந்தியா vs விண்டீஸ்; ஷர்துல் தாகூருக்கு பதிலாக ஒருநாள் அணியில் உமேஷ் யாதவிற்கு இடம் !!

    இந்தியா vs விண்டீஸ்; ஷர்துல் தாகூருக்கு பதிலாக ஒருநாள் அணியில் உமேஷ் யாதவ் விண்டீஸ் அணியுடனான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில்...

    ஆஸ்திரேலிய தொடரில் இவர்கள் விளையாட வேண்டும்; சுனில் கவாஸ்கர் விருப்பம் !!

    ஆஸ்திரேலிய தொடரில் இவர்கள் விளையாட வேண்டும்; சுனில் கவாஸ்கர் விருப்பம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ப்ரிதிவ் ஷா, உமேஷ் யாதவ் மற்றும்...

    உள்ளூர் டி.20 போட்டியில் களமிறங்கும் ஏ.பி டிவில்லியர்ஸ் !!

    உள்ளூர் டி.20 போட்டியில் களமிறங்கும் ஏ.பி டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற தென் ஆப்ரிக்கா...

    வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளருக்கு 2 ஒருநாள் போட்டிகள் தடை: ஐசிசி அதிரடி

    ஐசிசியின் நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் சுற்றுலாவிற்கு 2 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை ஐசிசி இன்று...

    யாரும் சொல்ல தேவை இல்லை, நானாக விலகி கொள்வேன்; கவுதம் காம்பீர் !!

    யாரும் சொல்ல தேவை இல்லை, நானாக விலகி கொள்வேன்; கவுதம் காம்பீர் நேரம் வரும்பொழுது தானாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன் என...