ஹர்பஜன் சிங்கை 2 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் !! 1
ஹர்பஜன் சிங்கை 2 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான ஹர்பஜன் சிங்கை, 2 கோடி ரூபாய் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.

சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.

ஹர்பஜன் சிங்கை 2 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் !! 2

இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இதில் ஓவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்டுள்ள நிலையில், மற்ற வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில்  இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

ஹர்பஜன் சிங்கை 2 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் !! 3

 

இதில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான சுழல் ஜாம்பவான், ஹர்பஜன் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.

ஐ.பி.எல் தொடரில் இதுவரை 136 போட்டிகளில் விளையாடி உள்ள ஹர்பஜன் சிங், இதுவரை 771 ரன்கள் எடுத்து, 127 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

தனது அடிப்படை விலையாக 2 கோடி ரூபாயை நிர்ணயம் செய்திருந்த  இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டியே இல்லாமல் ஏலத்தில் எடுத்துள்ளது.

Leave a comment

Your email address will not be published.