தனக்கு முன்னர் ஸ்ரதுல் தாகுரை அனுப்பியது ஏன்? ஹர்பஜன் சிங் விளக்கம்! 1

ஸ்ரதுல் தகூர் முதல்தர போட்டிகளில் ஒரு சில சதங்கள் அடித்துள்ளார். அந்த தருணத்தில் அவரால் ஒரு சில பவுண்டரிகள் அடிக்க முடியும் என்ற காரணத்திற்காகத் தான் தனக்கு முன்னர் அவரை அனுப்பி வைத்தார் தோனி, என்று ஹர்பஜன் சிங் காரணம் கூறியுள்ளார்.

நாம் வெற்றியை எப்படி இழந்தோம் என்பது புரியவில்லை என கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகள் ஐபிஎல் இறுதிப் போட்டியில் நேற்று களம் கண்டன. இப்போட்டியில் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-ஆவது முறையாக மும்பை கோப்பையை வென்றது.தனக்கு முன்னர் ஸ்ரதுல் தாகுரை அனுப்பியது ஏன்? ஹர்பஜன் சிங் விளக்கம்! 2தனக்கு முன்னர் ஸ்ரதுல் தாகுரை அனுப்பியது ஏன்? ஹர்பஜன் சிங் விளக்கம்! 3

சிறப்பாக பந்துவீசிய பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்ற மும்பை அணிக்கு 20 கோடி மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பிடித்த சென்னைக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “நேற்று நடைபெற்ற போட்டியில் தோல்வியுற்றது என் இதயத்தை நொறுக்கிவிட்டது. வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இந்த ஐபிஎல் போட்டியில் எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பாராட்டுக்கள். நாம் வெற்றியை எப்படி இழந்தோம் என்பது புரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் மற்றும் @ChennaiIPL ரசிகர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்,எதோ தங்கள் இல்லங்களில் ஒருவன் போல,அரவணைத்து அன்புசெலுத்திய உறவுகளின் இப்பண்பு, என்னை நெகிழ செய்தது.மீண்டும் அடுத்த வருடமும் #CSK வுக்கு விளயாடுவேன் என்றே நம்பிக்கையோடு கண்கள் கலங்க விடைபெறுகிறேன்.தனக்கு முன்னர் ஸ்ரதுல் தாகுரை அனுப்பியது ஏன்? ஹர்பஜன் சிங் விளக்கம்! 4

மேலும் மற்றொரு ட்வீட்டில், “தமிழ் மக்கள் மற்றும் சென்னை ஐபிஎல் ரசிகர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்,எதோ தங்கள் இல்லங்களில் ஒருவன் போல,அரவணைத்து அன்புசெலுத்திய உறவுகளின் இப்பண்பு, என்னை நெகிழ செய்தது. மீண்டும் அடுத்த வருடமும் சிஎஸ்கேவுக்கு விளையாடுவேன் என்ற நம்பிக்கையோடு கண்கள் கலங்க விடைபெறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *