இனி நானும் சென்னை சிங்கம் தான்…. ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் ! 1
இனி நானும் சென்னை சிங்கம் தான்…. ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னை ஏலத்தில் எடுத்துள்ளது குறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.

சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.

இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இதில் ஓவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்டுள்ள நிலையில், மற்ற வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில்  இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இனி நானும் சென்னை சிங்கம் தான்…. ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் ! 2

இந்த ஏலத்தில் யாரும் சற்றும் எதிர்பார்க்காத இந்திய அணியின் சுழல் ஜாம்பவான், ஹரபஜன் சிங்கை 2 கோடி ரூபாய் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த இவரை தற்போது சென்னை அணி விலை கொடுத்து வாங்கியிருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஹர்பஜன் சிங், தனது மகிழ்ச்சியை தமிழ் மொழியிலேயே தனது ட்விட்டர் பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார்.

இனி நானும் சென்னை சிங்கம் தான்…. ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் ! 3

இது குறித்து ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ள ட்வீட்டில் “வணக்கம் தமிழ்நாடு உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம் உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு”  என்று கெத்தாக பதிவிட்டுள்ளார்.

இவரின் வருகையை சென்னை ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். மேலும் ஹர்பஜன் சிங்கிற்கு பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *