எங்களுடைய பேவரட் கேப்டன் தோனி தான் கே.எல் ராகுல் மற்றும் பாண்டியா ஆகியோர் கூறியுள்ளனர்.

கே.எல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு எம் எஸ் தோனி தான் மிகவும் பிடித்தமான கேப்டன் என இருவரும் கூறியுள்ளனர், என்று இருவரும் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளனர், இந்திய அணியின் உடை மாற்றும் அறையில் என்னென்ன நடக்கும் என்பது குறித்து அவர்களிடம் கேட்கப்பட்டது.

அப்போது கேஎல் ராகுலிடம் உங்களுக்குப் பிடித்தமான கேப்டன் யார் எது கேட்கப்பட்டது. அதற்கு அவரது சாதனைகளை பார்த்தால் தோனிதான் எனது பிடித்தமான கேப்டன் என்று கூறியுள்ளார். அதிகப்படியாக சாதித்திருக்கிறார் எனவும் அதற்கு விளக்கம் கொடுத்தார்

எங்களுடைய பேவரட் கேப்டன் தோனி தான்: கே.எல் ராகுல் மற்றும் பாண்டியா! 1

பாண்டியாவிடம் கேள்வி கேட்கப்பட்டபோது அவர் கூறியதாவது எனக்கு பிடித்த கேப்டன் தோனிதான். அவரது தலைமையில் தான் எனது அறிமுகப் போட்டியில் ஆடினேன். அவர் ஒரு அற்புதமான கேப்டன் என்று கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது இந்த தொடரில் இந்தியாவின் துவக்க வீரராக களமிறங்கி கேஎல் ராகுல் 4 போட்டியிலும் கடுமையாக சொதப்பினார். இதனால் அவர் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.. பாண்டியாவை பார்த்தால் அவர் மூன்றாவது போட்டி தான் ஆஸ்திரேலியா வந்தார் ஆனால் அவர் வரவழைக்கப்பட்டு நான்காவது போட்டியில் ஆட வைக்கப்படவில்லை.

 

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

எங்களுடைய பேவரட் கேப்டன் தோனி தான்: கே.எல் ராகுல் மற்றும் பாண்டியா! 2

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் நேற்றைய 3-வது நாள் ஆட்டம் அத்துடன் முடிவடைந்தது. ஹேண்ட்ஸ்காம்ப் 28 ரன்னுடனும், கம்மின்ஸ் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மழையால் இன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மதிய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்கவில்லை. அதன்பின் ஆட்டம் தொடங்கியது. கம்மின்ஸ் 25 ரன்னிலேயே ஷமி பந்தில் க்ளீன் போல்டானார். ஹேண்ட்ஸ்காம்ப் 37 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த நாதன் லயன் ரன்ஏதும் எடுக்காமல் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். நாதன் லயன் ஆட்டமிழக்கும்போது ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது.எங்களுடைய பேவரட் கேப்டன் தோனி தான்: கே.எல் ராகுல் மற்றும் பாண்டியா! 3

கடைசி விக்கெட்டுக்கு ஸ்டார்க் உடன் ஹசில்வுட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. ஆஸ்திரேலியா 300 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹசில்வுட் 21 ரன்னில் ஆட்டமிழக்க, அந்த அணியின் முதல் இன்னிங்ஸ் அத்துடன் முடிவிற்கு வந்தது. ஸ்டார்க் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது. .இருவரும் இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்தனர். குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார். • SHARE

  விவரம் காண

  சீனியர் பந்துவீச்சாளர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு !!

  சீனியர் பந்துவீச்சாளர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின்...

  இந்திய அணியை வீழ்த்த இதை செய்ய வேண்டும்; நியூசிலாந்து வீரர்களுக்கு சீனியர் வீரர் அட்வைஸ் !!

  இந்திய அணியை வீழ்த்த இதை செய்ய வேண்டும்; நியூசிலாந்து வீரர்களுக்கு சீனியர் வீரர் அட்வைஸ் உலகத்தரம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மென்களுக்கு எதிராக பந்து வீச்சில்...

  இந்தியா இதை செய்யவிட்டால் உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம்; பாகிஸ்தான் உறுதி !!

  இந்தியா இதை செய்யவிட்டால் உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம்; பாகிஸ்தான் உறுதி பாகிஸ்தானில் இந்த ஆண்டு செப்டம்பரில் நடக்கும் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி...

  அதிரடி மாற்றத்துடன் களமிறங்கும் நியூசிலாந்து; இரண்டாவது டி.20 போட்டிக்கான அணி அறிவிப்பு !!

  அதிரடி மாற்றத்துடன் களமிறங்கும் நியூசிலாந்து; இரண்டாவது டி.20 போட்டிக்கான அணி அறிவிப்பு இந்தியா நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நாளை நடைபெற உள்ளது. விராட்கோலி...

  இந்திய அணியின் வெற்றி பயணம் தொடருமா..? நாளை இரண்டாவது டி.20 போட்டி !!

  விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் போட்டி தொடரில்...