ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் உலக கோப்பை தொடரில் ஆட விட்டாலும் பரவாயில்லை அவர்களுக்கான தண்டனை கிடைத்தே தீரும் என பிசிசிஐயின் நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது…

வீரர்களுக்கு என தனியான ஒழுக்க நெறிமுறைகள் உள்ளது அவர்கள் பிசிசிஐ-க்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது அவர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து தற்போது திரும்ப வேண்டும் அவர்கள் சுற்றுலாவிற்கு வந்த செல்லவில்லை. .அவர்கள் தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு கிடைக்கும் தண்டனைகள் அவர்கள் உலக கோப்பை தொடரை மிஸ் செய்து விட்டாலும் பரவாயில்லை. என்று கூறினார் டயானா எடுல்ஜி.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹார்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோரை விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் செய்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.
இதனால் ஆஸி. அணியுடன் நடக்கவுள்ள சிட்னி ஒரு நாள் ஆட்டத்தில் இருவரும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இருவரும் பெண்கள் தொடர்பாக தரக்குறைவான கருத்துக்களை கூறினர் என கடும் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக இருவரிடம் விளக்கம் கேட்டது பிசிசிஐ. இதற்கிடையே இருவரையும் 2 ஒரு நாள் ஆட்டங்களுக்கு தடை செய்ய சிஓஏ தலைவர் வினோத் ராய் பரிந்துரைத்தார். மற்றொரு உறுப்பினர் டயானா எடுல்ஜி, விசாரணை முடியும் வரை இருவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனக்கூறி சட்டப்பிரிவுக்கு பரிந்துரை செய்தார்.
இருவரையும் விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் செய்ய சட்டப்பிரிவு கூறியது. இப்பிரச்னை குறித்து விசாரிக்க பிசிசிஐ

அலுவலர் குழு அல்லது, இடைக்கால தீர்ப்பாயம் அமைக்கவும் தெரிவித்துள்ளது.
மேலும் விசாரணைக்காக இருவருக்கும் மீண்டும் புதிதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் எனத்தெரிகிறது. இதனால் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள இருவரும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்களா எனத் தெரியவில்லை. அவர்களுக்கு பதிலாக ரிஷப் பந்த், மணிஷ் பாண்டே, ஆகியோர் இடம் பெறலாம் எனவும் அணி வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துக்கள் ஏற்கத்தக்கவை இல்லை: விராட் கோலி
கேளிக்கை நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து ஹார்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் கூறிய கருத்துக்களை எனது அணி ஏற்காது என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
இந்நிலையில் கேப்டன் கோலி வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பாண்டியா, ராகுல் ஆகியோர் கூறிய கருத்துக்கள் ஏற்கத்தக்கவை அல்ல. இதை எங்கள் அணி ஏற்காது. ஒரு நாள் ஆட்டத்தில் அவர்கள் பங்கேற்பார்களா என தற்போது கூற முடியாது. இதுதொடர்பான முடிவுக்காக அணி நிர்வாகம் காத்துள்ளது. எங்கள் தங்கும் அறையில் நாங்கள் உருவாக்கியுள்ள நாகரீகம், கலாசாரத்துக்கு ஏற்ப இல்லை இந்த கருத்துக்கள். இதுதொடர்பாக அவர்களிடம் எங்கள் தரப்பையும் தெரிவித்து விட்டோம்.
அது அவர்களது தனிப்பட்ட கருத்தாக தான் கொள்ளப்படும்.அணி வீரர்களுக்கு கண்டிப்பாக பொறுப்பு உள்ளது. தங்கள் கருத்துகளால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தொடர்புடைய 2 வீரர்களும் உணர்ந்துள்ளனர். கண்டிப்பாக அவர்கள் புரிந்து கொள்வர் என்றார். • SHARE

  விவரம் காண

  உலகக்கோப்பையில் நானும் விளையாடுவேன்; ஸ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை !!

  உலகக்கோப்பையில் நானும் விளையாடுவேன்; ஸ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை 2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தான் இடம்பிடிப்பேன் என இளம் வீரர் ஸ்ரேயஸ் ஐயர்...

  ஹர்திக் பாண்டியா மீண்டும் அணியில் இடம்பிடிக்க வேண்டும்; அஜித் அகார்கர் விருப்பம் !!

  ஹர்திக் பாண்டியா மீண்டும் அணியில் இடம்பிடிக்க வேண்டும்; அஜித் அகார்கர் விருப்பம் ஹர்திக் பாண்டியா விரைவில் அணிக்கு திரும்ப வேண்டுமென இந்திய அணியின் முன்னாள்...

  விராட் கோஹ்லியின் சாதனையை காலி செய்த ஹசீம் ஆம்லா !!

  விராட் கோஹ்லியின் சாதனையை காலி செய்த ஹசீம் ஆம்லா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக 27 சதங்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் விராட்...

  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம்: ரவி சாஸ்திரி

  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம் என இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டெய்லி...

  தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் !!

  தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் தனக்கு பாண்டிங் எப்படியோ அப்படித்தான் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு தோனியின் ஆலோசனை தேவை என்று ஆஸ்திரேலிய...