தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ஹர்திக் பாண்ட்யா தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி உட்பட அனைத்து அணிகளும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு எல்லா அணிகளும் இங்கிலாந்து சென்றுவிட்டன. இந்திய அணியினர் நேற்று முதல் பயிற்சியையும் தொடங்கினர்.

இந்த உலகக் கோப்பை தொடரில் போட்டியை மாற்றும் அளவிற்கு முக்கிய பங்களிக்கும் நபர்கள் ஆல்ரவுண்டர்கள். அப்படி இந்திய அணியில் அதிக எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருப்பவர் ஹர்திக் பாண்ட்யா. பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டையும் சிறப்பாக வெளிப்படும் இவர் எதிரணிக்கு நிச்சயம் சவாலாக இருப்பார் எனக் கூறப்படுகிறது.

மேலும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியது இவருக்கு கூடுதல் பலமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய காலகட்டத்தில் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய அணி வீரர்களின் கவனத்தையும் ஹர்திக் பாண்ட்யா பெற்றுள்ளார். சமீபத்தில் பேசிய கங்குலி, உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா பெரிதும் உதவியாக இருப்பார் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ஹர்திக் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில் அவர் 2011ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை குறிப்பிட்டு, 2011ல் உலகக் கோப்பை இந்திய அணியை ஊக்கப்படுத்தினேன். 2019ல் உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்துள்ளேன். கனவு நினைவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார். பலரும் ஹர்திக் பாண்ட்யாவின் பதிவுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின.

உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் தொடங்கவுள்ளன, கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக இந்த 4ம் இடம், 5ம் இடம் பிரச்சினைகளை விராட் கோலி உட்பட அனைவரும் பேசி நம்மை சோர்வடையச் செய்து விட்டன.

எந்தக் காலத்திலும் இந்திய அணியில் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கான விவாதங்கள் நடந்ததில்லை என்பதே உண்மை. இப்படி விவாதங்கள் நடைபெறுகிறது என்றாலே அணியில் ஏதோ ஓட்டை உள்ளது என்றே நமக்கு சந்தேகம் எழுகிறது.

இந்நிலையில் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ பேட்டியில் சச்சின் டெண்டுல்கர் 4ம் இடம் 5ம் இடம் பற்றி கூறியுள்ளார்:

என் தனிப்பட்ட கருத்து தோனி 5ம் நிலையில் களமிறங்க வேண்டும்.  அணிச்சேர்க்கை என்னவென்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை, ரோஹித், தவண் தொடக்கத்தில் இறங்க நம்பர் 3-ல் கோலி பிறகு 4இல் யார் வேண்டுமானாலும் இறங்கட்டு, 5ம் நிலையில் தோனி இறங்க வேண்டும், பிறகு ஹர்திக் பாண்டியா. இதன் மூலம் அனுபவ வீரர்களுக்கான ஓவர்களை பேட்டிங்கில் பகிர்ந்தளிக்க முடியும்.

தோனி ஆட்டத்தை இறுதி வரை எடுத்துச் செல்வார், அப்போது ஹர்திக் போன்ற அதிரடி வீரர் அவருடன் இருந்தால் பலன் இருக்கும்.

இவ்வாறு கூறினார் சச்சின் டெண்டுல்கர்

 

https://www.instagram.com/p/Bx1xOSpAZ8W/ • SHARE

  விவரம் காண

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் !!

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் மூன்று வகை பாகிஸ்தான் அணிக்கும் சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்து வருகிறார்....

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் இந்திய டி.20 அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தான் பெரிதாக கவலை...

  இந்திய அணியின் உடையில் ராகுல் டிராவிட்: உண்மையான காரணம் இதுதான்!

  இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறும் இடத்துக்கு இன்று சென்ற தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன்...

  தோனிக்கெல்லாம் காலம் முடிஞ்சு போச்சு, கெளம்ப சொல்லுங்க! பெரிய இடத்தில் கை வைத்த சுனில் கவாஸ்கர்

  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் காலம் முடிந்துவிட்டது. அவருக்கு அடுத்து இருக்கும் ரிஷப் பந்தை நாம் வளர்க்க வேண்டும்...

  ரிஷப் பன்ட்டை தூக்கிவிட்டு இவரை களமிறக்குங்கள்; கவாஸ்கர் காட்டம்

  ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய...