இப்ப எல்லாம் ஓகே... ஆனால் ஹர்திக் பாண்டியாவால் இதை எவ்வளவு நாள் செய்ய முடியும்..? கேள்வி எழுப்பிய முன்னாள் வீரர் !! 1

ஹார்திக் பாண்டியாவிடம் திறமை உள்ளது ஆனால் கன்சிஸ்டன்ட்டும் இருந்தால் நல்லா இருக்கும் என்று முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்

மிகவும் கோலாகலமாக நடைபெற்ற 2022 ஐபிஎல் தொடர் இனிதே நிறைவு பெற்றது, இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை,மும்பை உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய நிலையில், 2022 ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.இப்ப எல்லாம் ஓகே... ஆனால் ஹர்திக் பாண்டியாவால் இதை எவ்வளவு நாள் செய்ய முடியும்..? கேள்வி எழுப்பிய முன்னாள் வீரர் !! 2

அணியும் புதிது அணிக்கு கேப்டனும் புதிது என்றாலும் தன்னுடைய முதல் தொடரிலேயே குஜராத் அணி கோப்பையை வென்றது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாதான் என்று கூறலாம், அந்த அளவிற்கு இவருடைய பங்களிப்பு குஜராத் அணிக்கு மிகவும் சிறப்பாகவே இருந்தது.

கடந்த ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட கார்த்திக் பாண்டியா தற்பொழுது மீண்டு வந்து கோப்பையை வென்றிருப்பது அவருடைய கடின உழைப்பை காட்டுவதாக பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.மேலும் இனிவரும் காலங்களில் ஹர்திக் பாண்டியா எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் அறிவுரையாக தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது அசாருதீன் ஹர்திக் பாண்டியா நிலையாக விளையாடுவதே தற்பொழுது முக்கியம் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

இப்ப எல்லாம் ஓகே... ஆனால் ஹர்திக் பாண்டியாவால் இதை எவ்வளவு நாள் செய்ய முடியும்..? கேள்வி எழுப்பிய முன்னாள் வீரர் !! 3
Hardik Pandya thanks the fans after the final. Photo: [email protected]_titans

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஹர்டிக் பாண்டியா இந்திய அணிக்கு சிறப்பாக தனது பங்களிப்பை கொடுக்கக்கூடிய திறமை உள்ளது, ஆனால் காயம் காரணமாக இவரால் கன்சிஸ்டன்டாக அணியில் இருக்க முடியவில்லை, தற்பொழுது பரிபூரண குணமாகி மீண்டும் அணிக்கு திரும்பியிருக்கும் இவர் டி20 போட்டிகளில் 4 ஓவர் வீசுவதற்கான தகுதியையும் பெற்றிருக்கிறார்., இது எத்தனை நாள் தொடரும் என்பது தெரியவில்லை,ஆனால் அவர் ஒரு ஆல்-ரவுண்டராக பந்து வீச வேண்டும் என்பது தற்போதைய இந்திய அணிக்கு நிச்சயம் தேவை, ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இவருடைய பந்துவீச்சு(3விக்கெட்) மற்றும் பேட்டிங்(34ரன்கள்) குஜராத் அணிக்கு வெற்றி பெற்று கொடுத்தது, ஹர்திக் பாண்டியாவிடம் நல்ல திறமை உள்ளது, ஆனால் அவருக்கு தற்பொழுது வேண்டியதெல்லாம் கன்சிஸ்டன்ட்(நிலையாக விளையாட வேண்டும்) தான் என்று அசாருதீன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.