கே.எல் ராகுல், ரிஷப் பண்ட் கிடையாது... இந்திய அணியின் அடுத்த கேப்டன் உறுதி; அடித்து சொல்லும் முன்னாள் வீரர் !! 1

ரோஹித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவே நியமிக்கப்படுவார் என முன்னாள் வீரரான WV ராமன் தெரிவித்துள்ளார்.

கடந்த வருட ஐபிஎல் தொடர் ஐபிஎல் தொடர் வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வந்த ஹர்திக் பாண்டியா, கடந்த வருட ஐபிஎல் தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்படாததால் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார். காயம் காரணமாக ஹர்திக் பாண்டியாவால் பழையபடி பந்துவீச முடியாததால் கடந்த வருடம் இந்திய அணியில் இருந்தும் ஹர்திக் பாண்டியா ஓரங்கட்டப்பட்டார்.

கே.எல் ராகுல், ரிஷப் பண்ட் கிடையாது... இந்திய அணியின் அடுத்த கேப்டன் உறுதி; அடித்து சொல்லும் முன்னாள் வீரர் !! 2

இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட பிறகு தானாக முன்வந்து அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் தற்காலிக ஓய்வை அறிவித்திருந்த ஹர்தின் பாண்டியா, தனது விளையாட்டில் முழு கவனத்தையும் செலுத்தி மீண்டும் பழைய ஹர்திக் பாண்டியாவாக மீண்டு வந்தார். இந்த வருட ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ஹர்திக் பாண்டியா, பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மிக சிறப்பாக செயல்பட்டு குஜராத் அணிக்கு சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்தார்.

கே.எல் ராகுல், ரிஷப் பண்ட் கிடையாது... இந்திய அணியின் அடுத்த கேப்டன் உறுதி; அடித்து சொல்லும் முன்னாள் வீரர் !! 3

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணியிலும் மீண்டும் இடம்பிடித்துள்ள ஹர்திக் பாண்டியா, இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கும் அயர்லாந்து அணிக்கு எதிரான டி.20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறப்பான ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட் உலகின் ஹாட் டாப்பிக்காக திகழ்ந்து வரும் ஹர்திக் பாண்டியாவை முன்னாள் வீரர்கள் பலரும் வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர்.

அந்தவகையில், ஹர்திக் பாண்டியா குறித்து பேசியுள்ள முன்னாள் வீரரான WV ராமன், ரோஹித் சர்மாவிற்கு பிறகு ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்துள்ளார்.

கே.எல் ராகுல், ரிஷப் பண்ட் கிடையாது... இந்திய அணியின் அடுத்த கேப்டன் உறுதி; அடித்து சொல்லும் முன்னாள் வீரர் !! 4

இது குறித்து WV ராமன் பேசுகையில், “இந்தியா அயர்லாந்து இடையேயான கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை பார்க்க ஆவலுடன் காத்துள்ளேன். ஐபிஎல் தொடரில் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்திய விதம் ஆச்சரியமாக இருந்தது. அவர் தனது அணிக்கான தனது பங்களிப்பை மிக மிக சரியாக செய்து வருகிறார், தனது வேலையை சரியாக செய்வதன் மூலம் சக வீரர்களுக்கும் ஹர்திக் பாண்டியா முன்னுதாரணமாக திகழ்ந்து உத்வேகத்தை கொடுக்கிறார். நிச்சயமாக மற்ற வீரர்களை விட ஹர்திக் பாண்டியாவே இந்திய அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு வாய்ப்பு மிக அதிகம்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.