இந்த சின்ன பையனுக்கு அவ்வளவு சீன் எல்லாம் கொடுக்காதீங்க… முன்னாள் வீரர் காட்டம் !! 1
இந்த சின்ன பையனுக்கு அவ்வளவு சீன் எல்லாம் கொடுக்காதீங்க… முன்னாள் வீரர் காட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில் தேவ்வுடன் ஒப்பிடும் அளவிற்கு ஹர்திக் பாண்டியா இன்னும் வளரவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கர்சன் காவ்ரி தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேப்டவுனில் நடைபெற்ற இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது மோசமான பேட்டிங் காரணமாக 72 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்த சின்ன பையனுக்கு அவ்வளவு சீன் எல்லாம் கொடுக்காதீங்க… முன்னாள் வீரர் காட்டம் !! 2

 

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி, மற்றும் முன்னணி வீர்ர்களான ரோஹித் சர்மா, தவான் உள்ளிட்ட அனைத்து பேட்ஸ்மேன்களும் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வந்த வேகத்தில் நடையை கட்டிய போது, இளம் வீரரான ஹர்திக் பாண்டியா மட்டும் நீண்ட நேரம் நிலைத்து நின்று 93 ரன்கள் எடுத்து இந்திய அணியின் மானத்தை காப்பாற்றினார்.

இந்த சின்ன பையனுக்கு அவ்வளவு சீன் எல்லாம் கொடுக்காதீங்க… முன்னாள் வீரர் காட்டம் !! 3

இதே போன்று 2017 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதி போட்டி உள்ளிட்ட சில போட்டிகளிலும் இந்திய அணிக்கு இக்கட்டான நிலையில் இருக்கும் போது சற்று கை கொடுத்து மானம் காக்கும் ஹர்திக் பாண்டியாவை, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் இந்திய அணியின் உலகக்கோப்பை  கனவை நினைவாக்கிய ஜாம்பவனான கபில் தேவ்வுடன் ஒப்பிட்டு, சிலர் பாண்டியாவை புகழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கர்சன் காவ்ரி, கபில் தேவ்வுடன் ஒப்பிடும் அளவிற்கு ஹர்திக் பாண்டியா இன்னும் வளரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த சின்ன பையனுக்கு அவ்வளவு சீன் எல்லாம் கொடுக்காதீங்க… முன்னாள் வீரர் காட்டம் !! 4

இது குறித்து பேசிய கர்சன் காவ்ரி, கடந்த சில தினங்களுக்கு நான் நாளிதழ்கள் படித்து கொண்டிருந்த போது அதில் சிலர் ஹர்திக் பாண்டியாவை, கபில் தேவ்வுடன் ஒப்பிட்டு புகழ்ந்திருந்தனர், இது தவறானது”.

கபில் தேவ்வை போன்று பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ஹர்திக் பாண்டியா சிறந்து விளங்கினாலும், ஜாம்பவான் கபில் தேவ்வுடன் ஒப்பிடும் அளவிற்கு அவர் இன்னும் வளரவில்லை. அத்தகைய நிலையை ஹர்திக் பாண்டியா அடைய வேண்டும் என்றால் அதற்கு அவர் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும், நேரமும் காலமும் இதனை முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சின்ன பையனுக்கு அவ்வளவு சீன் எல்லாம் கொடுக்காதீங்க… முன்னாள் வீரர் காட்டம் !! 5

மேலும் தென் ஆப்ரிக்கா அணியுடனான கேப்டவுன் டெஸ்ட் போட்டி குறித்து பேசிய கர்சன் காவ்ரி., உண்மையாக முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் இந்திய அணி அபாரமாக பந்துவீசியது. இந்திய பந்துவீச்சாளர்கள் தங்களின் பணியை மிக சிறப்பாகவே செய்தனர்.

இந்த தோல்வியை இந்திய அணி தனது பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் தான் சந்திக்க நேரிட்டது. எஞ்சியுள்ள இரண்டு போட்டியிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களது  பொறுப்பை உணர்ந்து கூடுதலான முயற்சியை கொடுத்தால் மட்டுமே இந்திய அணியால் வெற்றி பெற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நாளை துவங்குகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *