BRISBANE, AUSTRALIA - NOVEMBER 21: Ravi Shastri, Head Coach of India, looks on during game one of the the International Twenty20 series between Australia and India at The Gabba on November 21, 2018 in Brisbane, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

கே எல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் பெண்களை பற்றி தவறாக பேசியதற்கு சில போட்டிகளில் தடை விதித்தது பிசிசிஐ. இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார், தலைமை கோச் ரவி சாஸ்திரி.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பெண்கள் குறித்து தவறாகப் பேசிய சர்ச்சையில் சிக்கிய ஹர்திக் பாண்டியா மற்றும் கே எல் ராகுல், அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய அணியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டனர். இதனால், சில போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவித்த இருவரும், ரஞ்சிப் போட்டியில் தனது திறமையை நிரூபித்தனர்.

 

ஹர்திக் பாண்டியாவின் உடல்தகுதி திருப்தி தரும் வகையில் இருந்ததால், நியூசிலாந்துக்கு எதிராக தொடரில் மீண்டும் சேர்க்கப்பட்டார். அந்தத் தொடரில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பார்முக்கு வந்துவிட்டதை உறுதி செய்தார். இதனை அடுத்து, இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முழுத் தொடரில் இருந்தும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலகியதாக பிசிசிஐ திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவருக்கு முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் விலகியதாக பிசிசிஐ தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவர்களின் தடை குறித்து பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது, “அவர்களுக்கு அளித்த தண்டனை சரி தான். இப்போது தான் வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள். நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். இதுபோல சர்ச்சையில் சிக்கினால் தான் நிறைய கற்றுக்கொண்டு வளர முடியும். இது அவர்கள் இருவருக்கும் ஒரு படமாக அமையும்” என்றார்.



  • SHARE

    விவரம் காண

    மிகப்பெரும் நம்பிக்கையே தல தோனி தான்; ரவி சாஸ்திரி புகழாரம் !!

    மிகப்பெரும் நம்பிக்கையே தல தோனி தான்; ரவி சாஸ்திரி புகழாரம்  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தோனியின் பங்கு இந்திய அணியில் மிக முக்கியமானதாக இருக்கும்...

    உலக கோப்பையில் மாஸ் காட்ட இதை செய்யுங்கள்; ஆஃப்கானிஸ்தான் அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் கும்ப்ளே !!

    உலக கோப்பையில் மாஸ் காட்ட இதை செய்யுங்கள்; ஆஃப்கானிஸ்தான் அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் கும்ப்ளே உலக கோப்பை நெருங்கிய நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து...

    சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோஹ்லி தான் பெஸ்ட்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !!

    சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோஹ்லி தான் பெஸ்ட்; முன்னாள் வீரர் ஓபன் டாக் கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை விட...

    இந்திய அணியின் இரண்டு நம்பிக்கை தூண்கள் இவர்கள் தான்; கோஹ்லி பாராட்டு !!

    இந்திய அணியின் இரண்டு நம்பிக்கை தூண்கள் இவர்கள் தான்; கோஹ்லி பாராட்டு யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவர் இந்திய அணியின்...

    உலகக்கோப்பை ஆஸ்திரேலிய அணிக்கு தான்; அடித்து சொல்லும் ஆடம் கில்கிறிஸ்ட் !!

    உலகக்கோப்பை ஆஸ்திரேலிய அணிக்கு தான்; அடித்து சொல்லும் ஆடம் கில்கிறிஸ்ட் உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெல்வதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது என ஆஸ்திரேலிய அணியின்...