ஹர்திக் பாண்டியா
சஞ்சு சாம்சன், உம்ரன் மாலிக்கிற்கு இடம் கொடுக்காதது ஏன்..? விளக்கம் கொடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி.20 தொடரில் சஞ்சு சாம்சன் மற்றும் உம்ரன் மாலிக்கிற்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்காததற்கான காரணத்தை ஹர்திக் பாண்டியா வெளியிட்டுள்ளார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

சஞ்சு சாம்சன், உம்ரன் மாலிக்கிற்கு இடம் கொடுக்காதது ஏன்..? விளக்கம் கொடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா !! 1

இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான டி.20 தொடரை தீர்மானிக்கு மூன்றாவது மற்றும் கடைசி டி.20 போட்டி நியூசிலாந்தின் நேப்பியர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு டீவன் கான்வே 59 ரன்களும், கிளன் பிலிப்ஸ் 54 ரன்களும் எடுத்தாலும், மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் நியூசிலாந்து அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

சஞ்சு சாம்சன், உம்ரன் மாலிக்கிற்கு இடம் கொடுக்காதது ஏன்..? விளக்கம் கொடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா !! 2

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்பின் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணி 9 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால், போட்டியும் பாதியில் முடித்து கொள்ளப்பட்டது. டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால் போட்டி டிரா முடிந்தது. இதனால் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டி.20 தொடரை கைப்பற்றியது.

சஞ்சு சாம்சன், உம்ரன் மாலிக்கிற்கு இடம் கொடுக்காதது ஏன்..? விளக்கம் கொடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா !! 3

ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி, நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியிருந்தாலும், உம்ரன் மாலிக், சஞ்சு சாம்சன், சுப்மன் கில் போன்ற வீரர்களுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்காதது ஏன் என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர்.

இந்தநிலையில், நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் உம்ரன் மாலிக் மற்றும் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காததற்கான காரணத்தை இந்திய அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவே வெளியிட்டுள்ளார்.

சஞ்சு சாம்சன், உம்ரன் மாலிக்கிற்கு இடம் கொடுக்காதது ஏன்..? விளக்கம் கொடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா !! 4

இது குறித்து ஹர்திக் பாண்டியா பேசுகையில், “அனைத்து வீரர்களுக்கும் சரியான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறோம், ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடர் வெறும் 3 போட்டிகளை கொண்ட சிறிய தொடர். எனவே அனைத்து வீரர்களுக்கும் வெறும் மூன்று போட்டியில் வாய்ப்பு கொடுப்பது சாத்தியம் இல்லை. அனைத்தையும் விட அணியின் வெற்றியே முக்கியம், எனவே வெற்றிக்கு தேவையான வலுவான ஆடும் லெவனை தேர்வு செய்வதே அவசியம். பயிற்சியாளர்களுடன் ஆலோசித்தே ஆடும் லெவனை தேர்வு செய்தோம். சிறிய தொடர் என்பதாலும், ஒரு போட்டி மழையால் தடைப்பட்டதாலும் தான் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை. அடுத்த டி.20 உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருப்பதால், அதற்கு முன் நிச்சயம் அனைத்து வீரர்களுக்கும் சரியான வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.