பயிற்சியின் நடுவே தோனியை போல ஹெலிகாப்டர் ஷாட் ஆடி அசத்தினார் ஹர்திக் பாண்டியா. இதன் விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பெண்கள் குறித்து தவறாகப் பேசிய சர்ச்சையில் சிக்கிய ஹர்திக் பாண்டியா, அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய அணியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டார். இதனால், சில போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவித்த அவர், ரஞ்சிப் போட்டியில் தனது திறமையை நிரூபித்தார்.

India’s Hardik Pandya points as New Zealand’s Tom Latham (R) makes a run during the third one day international cricket match between New Zealand and India at Bay Oval in Mount Maunganui on January 28, 2019. (Photo by MICHAEL BRADLEY / AFP) / — IMAGE RESTRICTED TO EDITORIAL USE – STRICTLY NO COMMERCIAL USE — (Photo credit should read MICHAEL BRADLEY/AFP/Getty Images)

ஹர்திக் பாண்டியாவின் உடல்தகுதி திருப்தி தரும் வகையில் இருந்ததால், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் மீண்டும் சேர்க்கப்பட்டார். அந்தத் தொடரில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பார்முக்கு வந்துவிட்டதை உறுதி செய்தார். இதனை அடுத்து, இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முழுத் தொடரில் இருந்தும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலகியதாக பிசிசிஐ திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவருக்கு முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் விலகியதாக பிசிசிஐ தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டு வந்து மீண்டும் அணியில் இணைய உடற்பயிற்சி செய்து வருவதுடன், அவ்வப்போது பந்துவீச்சு மற்றும் பேட்டிங் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது பயிற்சியில் அவர் தோனியின் ட்ரேட்மார்க் ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட் அடித்தார். அதனை வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், இது யாரை பார்த்து நான் செய்தது? கண்டுபிடியுங்கள்? எனவும் கேட்டிருந்தார். இதற்க்கு தோனி.. தோனி என கமெண்ட்டுகள் குவிகின்றன.

வீடியோ:

  • SHARE

  விவரம் காண

  யுவராஜ் சிங் அதிரடி வீண்…! மும்பை அணி தோல்வி! ட்விட்டர் ரியாக்சன்!!

  12-ஆவது ஐபிஎல் சீசனின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில்...

  வீடியோ; ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மாஸ் காட்டிய ரிஷப் பண்ட் !!

  வீடியோ; ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மாஸ் காட்டிய ரிஷப் பண்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் ருத்ரதாண்டம் ஆடியுள்ளார். ஐ.பி.எல்...

  பும்ராஹ்விற்கு ஓய்வு கொடுத்துவிடுங்கள்; ட்விட்டரில் ரசிகர்கள் வேண்டுகோள் !!

  பும்ராஹ்விற்கு ஓய்வு கொடுத்துவிடுங்கள்; ட்விட்டரில் ரசிகர்கள் வேண்டுகோள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டு பும்ராஹ்விற்கு ஐ.பி.எல் தொடர் முழுவதிலும் இருந்து ஓய்வு வழங்க...

  ரிஷப் பன்ட் பேயடி!! டெல்லி அணி 213 ரன் குவிப்பு!! ட்விட்டர் ரியாக்சன்!!

  மும்பை மற்றும் டெல்லி அணிகள் இடையேயான முதல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் ஆடும் லெவன் ரோஹித்...

  ராஜஸ்தான் vs பஞ்சாப்: ராஜஸ்தான் மண்ணில் வெல்லுமா பஞ்சாப்?

  கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்.ஆர்) இரு அணிலும் 4வது ஆட்டத்தில் மோதுகின்றன. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில்...