பென் ஸ்டோக்ஸை விட இந்த இந்திய வீரர் தான் பெஸ்ட்... சேன் வாட்சன் அதிரடி பேச்சு !! 1

பென் ஸ்டோக்ஸைவிட ஹர்திக் பாண்டியா சிறந்த ஆல்ரவுண்டர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது என்று ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்

சமகால கிரிக்கெட் தொடரின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக வளம் வரும் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, பேட்டிங் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அசத்தி இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸை விட இந்த இந்திய வீரர் தான் பெஸ்ட்... சேன் வாட்சன் அதிரடி பேச்சு !! 2

கடந்த இரண்டு வருடங்களாக பந்துவீச முடியாமல் தடுமாறி வந்த ஹர்திக் பாண்டியா கடினமான முயற்சியின் மூலம் தன்னுடைய பழைய பார்மை மீட்டெடுத்து, 2022 ஐபிஎல் தொடரில் தன்னுடைய கம்பேக்கை கொடுத்தார். அன்றிலிருந்து இன்று வரை மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணிகளில் ஒருவராக திகழும் ஹர்திக் பாண்டியாவை உலகின் பல்வேறு திசைகளில் இருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் பாராட்டி வருகின்றனர்.

பென் ஸ்டோக்ஸை விட இந்த இந்திய வீரர் தான் பெஸ்ட்... சேன் வாட்சன் அதிரடி பேச்சு !! 3

இந்த நிலையில் உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக போற்றப்படும் பென் ஸ்டோக்ஸை விட ஹர்திக் பாண்டியாவே ஷார்டர் பார்மட்டில் மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக உள்ளார் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் பாராட்டி பேசியுள்ளார்.

பென் ஸ்டோக்ஸை விட இந்த இந்திய வீரர் தான் பெஸ்ட்... சேன் வாட்சன் அதிரடி பேச்சு !! 4

ஹர்திக் பாண்டியா குறித்து ஷேன் வாட்சன் பேசுகையில், “ஹர்திக் பாண்டியா தற்போது விளையாட்டின் உச்சத்தில் இருக்கிறார். அவருடைய விளையாட்டை பார்ப்பது மிகவும் அருமையாக உள்ளது, வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் மிக சிறப்பாக செயல்படுவதை பார்ப்பதை நான் மிகவும் விரும்புகிறேன், அவரால் போட்டியை மாற்றக்கூடிய அளவிற்கு சிறப்பாக செயல்பட முடியும்.அது பேட்டிங்காக இருந்தாலும் சரி.. பந்துவீச்சாக இருந்தாலும் சரி.., ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்படுவதை பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது, குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா பென் ஸ்டோக்ஸை விட தலை சிறந்த ஆல்ரவுண்டராகவே உள்ளார், பேட்டிங்கில் எங்கு வேண்டுமானாலும் களமிறங்கக்கூடிய அந்த திறமை உண்மையில் அபரிவிதமானது, மேலும் அவருடைய பந்துவீச்சு மிகவும் நேர்த்தியாக உள்ளது” என்று ஹர்திக் பாண்டியாவை ஷேன் வாட்சன் பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.