தோனி ஸ்டைலில் ரிப்போட்டரை வறுத்தெடுத்த ஹர்திக் பாண்டியா!! நக்கலாக கேள்வி கேட்டவருக்கு, மாஸ் பதில்!! 1

ஹர்திக் பாண்டியாவிடம் நக்கலாக கேள்வி கேட்ட பத்திரிக்கையாளருக்கு அட்டகாசமாக பதில் கொடுத்திருக்கும் செயல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவலாக பேசப்படுகிறது.

டி20 உலக கோப்பைக்கு முன்பாக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. முதல் டி20 போட்டி மொகாலியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 208 ரன்கள் அடித்தது.

துவக்க வீரர் கேஎல் ராகுல் மிக சிறப்பாக விளையாடி 55 ரன்கள் விலாசினார். அதன் பிறகு மிடில் ஓவர்களில் சூரியகுமார் யாதவ் 46 ரன்கள் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டார். பினிஷிங் ரோல் செய்த ஹர்திக் பாண்டியா வந்த கணம் முதல் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளாக விலாசி இந்திய அணியின் ஸ்கோரை மலவன உயர்த்தினார். இவர் 30 பந்துகளில் 71 ரன்கள் அடித்தது மிகப் பெரிய வித்தியாசமாக பார்க்கப்பட்டது.

தோனி ஸ்டைலில் ரிப்போட்டரை வறுத்தெடுத்த ஹர்திக் பாண்டியா!! நக்கலாக கேள்வி கேட்டவருக்கு, மாஸ் பதில்!! 2

இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்ச் 22 ரன்களில் ஆட்டம் இழந்தார். முதல் முறையாக சர்வதேச போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்கிய கிரீன், அதை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு 30 பந்துகளில் 61 ரன்கள் விலாச, ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் சட்டென்று மேலே சென்றது. ஸ்மித் 35 ரன்கள் அடித்து வழக்கம் போல தனது பங்களிப்பை கொடுத்து வெளியேறினார். இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி ரன்களை கட்டுப்படுத்தி வந்த இந்தியாவிற்கு, கீழ் வரிசையில் களமிறங்கிய மேத்தியு வேட் அச்சுறுத்தலாக திகழ்ந்தார். இவர் 21 பந்துகளில் 45 ரன்கள் விலாசி ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெறச் செய்தார். 19.2 ஓவர்களில் இலக்கை எட்டிய ஆஸ்திரேலிய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை கைப்பற்றியது.

போட்டி முடிந்த பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட ஹர்திக் பாண்டியா நக்கலாக கேள்வி கேட்ட ஒரு பத்திரிக்கையாளரிடம் அவருக்கு இணையாக நச்சென்று பதில் கொடுத்திருக்கும் சம்பவம் தற்போது வைரலாகியுள்ளது. பத்திரிக்கையாளர் ஒருவர், “ஹர்ஷல் பட்டேல் பதினெட்டாவது ஓவரில் 22 ரன்கள் கொடுத்திருக்கிறார். அதுதான் இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்து விட்டதா?” என்று கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த பாண்டியா, “பாருங்கள்! எங்களுக்கு அது முன்னாடியே தெரியாது. தெரிந்து இருந்தால் நாங்கள் நிறுத்தி இருப்போம். உங்களுக்கு அது தெரியுமா? எந்த ஓவரில் எத்தனை ரன்கள் போகும் என்று!.” என எதிர் கேள்வி எழுப்பினார்.

தோனி ஸ்டைலில் ரிப்போட்டரை வறுத்தெடுத்த ஹர்திக் பாண்டியா!! நக்கலாக கேள்வி கேட்டவருக்கு, மாஸ் பதில்!! 3

மேலும் பேசிய பாண்டியா, கடைசி சில ஓவர்களில் பவுண்டரிகள் வருவது இயல்பு. அதற்காக பந்துவீச்சாளர்களை தொடர்ந்து குற்றம்குறை கூறஇயலாது. எதிரணி வீரர்களும் ஒரு சில ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்தார்கள். அப்போது அவர்களுக்கும் அந்த எண்ணம் இருக்கும், நாமும் அடித்துவிடலாம் என்று. ஆகையால் வெறுமனே ஒரு விஷயத்தை மட்டும் வைத்துக்கொண்டு விமர்சனத்தை முன்வைக்க கூடாது.” என்று பத்திரிக்கை சந்திப்பில் கூறினார்.

Leave a comment

Your email address will not be published.