“அதிரடியாக விளையாட நான் ரெடி” ! சிஎஸ்கே அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் பேட்டி ! 1

 2008ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் தற்போது வரை 13 சீசன்கள் முடிவடைந்துள்ளது. 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் 14வது ஐபிஎல் சீசன் ஏப்ரல்/மே மாதம் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இந்த 14வது ஐபிஎல் சீசனுக்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி நடைபெற்றது. 

“அதிரடியாக விளையாட நான் ரெடி” ! சிஎஸ்கே அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் பேட்டி ! 2

இந்நிலையில், தோனி தலைமையிலான  சிஎஸ்கே அணி கடந்த சீசனில் சிறந்த ஓப்பனர்களின்றி தவித்து வந்தனர். இதனால் மிடில் ஆர்டரில் சிரமம் ஏற்பட்டதாக தோனி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சென்னை அணி ஓப்பனர்களை குறிவைத்து ஏலத்தை நடத்தியது. முதலில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ராபின் உத்தப்பாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேடிங் மூலம் அணியில் சேர்த்தது. இதையடுத்து மொயின் அலி, கிருஷ்ணப்ப கவுதம்,ஹரி நிஷாந்த், ஹரிஷங்கர் ரெட்டி, புஜாரா, பகத் வர்மா போன்ற வீரர்களை சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. 

“அதிரடியாக விளையாட நான் ரெடி” ! சிஎஸ்கே அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் பேட்டி ! 3

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்த வீரர்களில் தமிழ்நாடு அணியின் இளம் வீரர் ஹரி நிஷாந்த் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரி நிஷாந்த் தமிழ்நாடு அணியின் அதிரடி வீரர் ஆவார். ஹரி நிஷாந்த் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் தமிழ்நாடு அணியை பல முறை வெற்றி பெற வைத்திருக்கிறார். தற்போது நடைபெற்று முடிவடைந்த சையது முஷ்டாக் அலி தொடரில் தமிழ்நாடு அணிக்காக விளையாடிய இவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

“அதிரடியாக விளையாட நான் ரெடி” ! சிஎஸ்கே அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் பேட்டி ! 4

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரைத் தேர்வு செய்தது சிறந்த முடிவாக கருதப்படுகிறது. இந்நிலையில் சிஎஸ்கே அணியில் தேர்வானது குறித்து ஹரி நிஷாந்த் கூறுகையில் “ சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது அனைவருக்கும் மிகப் பெரிய கனவாக இருக்கும். தற்போது எனக்கு அந்த கனவு நிறைவேறி இருக்கிறது. நான் சென்னை அணிக்காக தேர்வானது சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. நான் எந்த இடத்தில் களமிறங்கினாலும் அதிரடியாக விளையாட ரெடியாக இருக்கிறேன்”  என்று கூறியிருக்கிறார் ஹரி நிஷாந்த்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *