புவனேஷ்வர் குமார், பும்ராஹ் இல்லை.... இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வது இவர் கையில் தான் உள்ளது; முன்னாள் வீரர் பாராட்டு !! 1

எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹர்சல் பட்டேலின் பங்களிப்பு இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும் என முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த டி.20 உலக்கக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல தகுதியான அணிகளில் முதன்மையான அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, படு மோசமான தோல்விகளால் லீக் சுற்றை கூட தாண்ட முடியாமல் வெளியேறியது. இதனால் இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற இருக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை கட்டமைப்பதில் பிசிசிஐ., பெரும் முனைப்பு காட்டி வருகிறது. கடந்த தொடரில் செய்த தவறுகளை மீண்டும் செய்துவிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் இந்திய அணி, சீனியர் வீரர்களை விட சமீபகாலமாக இளம் வீரர்கள் பலருக்கு போதிய வாய்ப்புகள் வழங்கி வருகிறது.

புவனேஷ்வர் குமார், பும்ராஹ் இல்லை.... இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வது இவர் கையில் தான் உள்ளது; முன்னாள் வீரர் பாராட்டு !! 2

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கி வருவதால், முன்னாள் இந்திய வீரர்கள் பலர், இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர், டி.20 உலகக்கோப்பை தொடரில் ஹர்சல் பட்டேல் இந்திய அணியின் துருப்பு சீட்டாக இருப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புவனேஷ்வர் குமார், பும்ராஹ் இல்லை.... இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வது இவர் கையில் தான் உள்ளது; முன்னாள் வீரர் பாராட்டு !! 3

இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், “ஹர்சல் பட்டேல் போன்ற சிறந்த பந்துவீச்சாளர் இருப்பது கேப்டனுக்கு அதிக நம்பிக்கையை கொடுக்கும். டி.20 உலகக்கோப்பை தொடரில் ஹர்சல் பட்டேல் நிச்சயமாக இந்திய அணியின் துருப்பு சீட்டாக இருப்பார். ஹர்சல் பட்டேலால் பவர்ப்ளே ஓவர்களிலும் பந்துவீச முடியும், கடைசி ஓவர்களையும் சிறப்பாக வீச முடியும் எனவே ஹர்சல் பட்டேல் நிச்சயமாக இந்திய அணிக்கு கூடுதல் வலு சேர்ப்பார். அவரது பங்களிப்பு இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.